Skip to main content

திரிவெடி 3 விடைகள்

 இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்: உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை.

 
தனது கூர்வாளை ஏந்தி அந்த இளவயதினள் செம்மரங்கள் அடர்ந்த  காட்டில் சென்றது புதுவெள்ளம் புரண்டோடியது போலிருந்தது என்றால் அது மிகையாகாது, உண்சொல்லே.

 சாண்டில்யன் கதை போல் தொடங்கிய இந்த வாக்கியத்தில் கடைசியாக ஏதோ இடிப்பது போல் இருக்கிறதா? அதுதான் இன்றைய திரிவெடியில்  அடங்கிய பிணைப்பு.

 கூர்மை (கூர்), இளமை (இள), செம்மை(செம்), புதுமை (புது) என்பவை பண்புப்பெயர்கள்,  மையையிழந்து பெயரடையாகும். ஆனால் உண்மையோ பல்லையிளிக்கும் (அல்லது உண்ணென்று சொல்லி  வாயைத் திறக்க வைக்கும்).


மீ. கண்ணன், அகிலா ஸ்ரீதரன், ராமகிருஷ்ண ஈஸ்வரன் இம்மூவரும் சரியாக‌ இதைக் கண்டறிந்து விடையளித்திருக்கிறார்கள்.

  ஒரு சந்தேகம். சுற்றி எதுவும் இல்லாமல் தனிமையில் இருக்கும்  மரம் "தனிமரம்", வெண்மையாக வானில் மிதந்து வருவது "வெண்மேகம்" என்றால் , எங்கேயிருந்து இந்த "புதுமைப்பெண்" வந்தாள்? தெரிந்தவர்கள் விளக்கவும்.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

 

 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்