திரிவெடி 1 (07/04/2024)
வாஞ்சிநாதன்
நியூயார்க் டைம்ஸ் வெளியிடும்
கனெக்ஷன்ஸ்
புதிரைத் தழுவியமைக்கப்பட்டது இந்த வெடி. இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இழைகள் பலவற்றைத் திரித்து கயிறு உருவாக்குதல் போல இதில் நான்கைத் திரித்தால் ஒரு
தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும்
அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை.
உதாரணம்: அகலம், அதரம், அவலம், அங்கம்
இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்?
அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள சொற்கள் கிடைக்கின்றன.
நான் புதிரை ஒருவிடையை மனதில் கொண்டே அமைப்பேன். என்னையறியாமல் சரியான
விளக்கத்துடன் மற்றொரு விடை பொருந்தினாலும் எற்றுக்கொள்வேன்.
வேண்டுமென்றே 5 வயதுக் குழந்தைகள் கண்டுபிடிக்கும் தொடர்பும் வருமாறும் சொற்கள் இருக்கலாம். ஆனால் சற்றே ஆழமான பிணைப்பே சரியான விடையாக இருக்கும்.
நான் குறுக்கெழுத்துப்புதிரிலிருந்து வருவதால் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம். போகப்போகத்தான் இது ஸ்திரமாகும்.
இன்றைய திரிவெடி:
பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கைத் திரித்துப் பிணைக்கலாம்? எது சேராத சொல்?
தாரம், நேசம், காயம், பாசம், காரம்
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments
ஸந்தியா, ராம்கி, ரவி சுந்தரம் பொறுத்திருங்கள். வரும் நாட்களில் இன்னமும் கஷ்டமான திரிவெடி வரும்.