திரிவெடி 2 (11/04/2024)
வாஞ்சிநாதன்
இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை.
உதாரணம்: அகலம், அதரம், அவலம், அங்கம்
இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்?
அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள சொற்கள் கிடைக்கின்றன.
இன்றைய திரிவெடி:
பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு சொற்கள் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராத சொல்?
ஆடு, நண்டு, படகு, தராசு, மீன்
உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
Comments
சுவைத்தேன்!
விடை பகிர்ந்தேன்.