Skip to main content

திரிவெடி 2

திரிவெடி 2 (11/04/2024) 

 வாஞ்சிநாதன் 

 

இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை.
உதாரணம்:  அகலம், அதரம், அவலம், அங்கம்
இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்?
அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர  மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள  சொற்கள் கிடைக்கின்றன.
இன்றைய திரிவெடி:
பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு சொற்கள் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராத சொல்?  

ஆடு, நண்டு, படகு, தராசு, மீன்

உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

Comments

Raghavan MK said…
புதிய பாதையில் புதிர்கள்!
சுவைத்தேன்!
விடை பகிர்ந்தேன்.
Sandhya said…
This is lot of fun. Answered. Looking forward for next week.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்