Skip to main content

விடை 4289

நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள்.
நேற்று காலை வெளியான வெடி
மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4)
அதற்கான விடை
ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்