உதிரவெடி தேய்ந்து 'உ' விழுந்து திரிவெடியாகியது என்று நினைக்காமல் இப்புதுவகைப் புதிரை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அதற்கு நன்றி.
இந்த வாரம் ரம்ஜான் விடுமுறை வியாழக்கிழமை வருவதால் அன்றும் இன்னொரு திரிவெடி வெளிவரும். அதன் பிறகு சனிக்கிழமைதோறும் திரியும், ஞாயிறுகளில் உதிரியும் வெளியிடத் திட்டம்.
இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: தாரம், நேசம், காயம், பாசம், காரம்
இவற்றில் நான்கு சொற்கள் முன்பு "ஆ" என்ற எழுத்தை ஒட்ட ஆதாரம், ஆகாயம், ஆபாசம், ஆகாரம் என்ற சொற்களைப் பெறலாம். நேசம்தான் இடிக்கிறது. அதுவே மற்றவையோடு சேராத சொல்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
அடுத்த திரியில் சொல்லின் பொருளையும் பயன்படுத்தி விடையை அடையுமாறு அளிக்கிறேன்.
இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
Comments