Skip to main content

திரிவெடி 2 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
ஆடு, நண்டு, படகு, தராசு, மீன் இதில் ஆடு(மேஷம்), நண்டு (கடகம்), தராசு (துலாம்), மீன் (மீனம்) இவையெல்லாம் சோதிடத்தில் கூறப்படும் ராசிகள் என்பதால் தொடர்புடைய சொற்கள். படகு இதில் சேராதது.
வேறு சில தொடர்புகள்: ஆடு, நண்டு, படகு, தராசு இவை உகரத்தில் முடிபவை, மீன் மெய்யெழுத்தில்.
ஆடு, நண்டு, படகு, மீன் போலில்லாமல் தராசு ஒரே இடத்தில் இருப்பது.
அவை அவ்வளவு பலமாக இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் உங்கள் கற்பனைகளில் ஏதாவது நான் எண்ணிய தொடர்பை விடச் சிறந்ததாக இருக்கலாம். அனுப்பிக் கொண்டிருங்கள். இந்த புதுவித விளையாட்டில் வெறும் சொல் திறமை மட்டுமின்றி, பொது அறிவின் அடிப்படையிலும் தொடர்புகள் அமையும் என்பதை இனி வரும் நாட்களில் நினவு கொள்ளுங்கள். இனிமேல் சனிக்கிழமைதோறும் திரிவெடி.
விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.