வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன்.
நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள்.
இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது.
குடிப்போர்க்கு போதை விடிந்தால் குறையும்
வெடிதரும் இன்பமோ வேரிட்டு நின்றிடும்
பாங்கான ஆட்டம் படித்தறிந்த மாந்தர்க்கு
நீங்கா நினைவாம் புதிர்
கொஞ்சம் பழங்கதை
என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி 7x7 அளவிலான கட்டங்களில் அமைத்து நான்கைந்து நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.
சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில் ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்) 1998 டிசம்பரில் தொடங்கினர். அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது.
பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சுப் பத்திரிகையான தென்றல் மாத இதழுக்கு 12 வருடங்கள் (2001-2012) தயாரித்துக் கொடுத்தேன். அவையெல்லாம் தென்றலின் வலைத்தளத்தில் http://tamilonline.com/thendral/index.aspx இறங்கித் தேடினால் கிடைக்கும்.
பிறகு ராபர்ட் கனிகல் எழுதிய ராமானுஜனின் சரிதையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் வேலையை மேற்கொண்டதால் புதிரை நிறுத்தும்படியானது.
நான்கு வருட இடைவெளிக்குப் பின் வாட்ஸப் குழு ஒன்றை 2017 ஏப்ரலில் ஆரம்பித்து தினம் ஒரு புதிர் என்று நடத்தி வந்தேன். ஒற்றைப் புதிர்களாய் வந்ததால் அக்குழுவுக்கு உதிரிவெடி என்ற பெயர் பொருத்தமாயிருந்தது. முப்பது பேருடன் தொடங்கிய அக்குழு எட்டு மாதங்களில் 150 பேர் கொண்ட குழுவாய் வளர்ந்தது.
அதன் வளர்ச்சியையும் அதில் பங்கு கொண்டோர் ஆர்வத்தையும் கண்டு இணையத்தில் இன்னும் பரவலாகத் தெரியும்படி வெளியிட வேண்டும் என்று இந்த வலைப்பதிவு அதே பெயரில் இந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கும் தினத்தில் வெளியாகிறது.
வலையுலக மாந்தரே கேட்பீரே என்றும்
நிலையிலா மண்ணுலக வாழ்வில் கலையாத
கோலமாம் கொள்ளைத் தமிழழகைக் காட்டிட
நாளொன் றளிப்பேன் வெடி

Comments
Dear Dr. Vanchi
As the year 2018 comes to an end, the blog form of Udhiruvedi completes one year. I thank you for the creative effort you have taken in making up puzzles every day without fail and the countless hours spent by you and Ambika towards posting the solvers list. I would also like to thank Mr. MKR for his daily peeks that serve as a treasure trove of snippets from Tamil literature.
Wishing all in the Udhirivedi family a happy and prosperous new year
தினம் தோறும் தீபாவளி.
நன்றியுடன்....
Message from Dr. KB
Vanchi is steadfast in everything. He completed 5 years in Thendral. We look forward to a similar record here too.
உதிரிவெடி
************
துள்ளித்திரியும் பச்சிளம் கன்றிது
ஓராண்டு நிறைவுற்ற தருணமிது
தேன்பாகாய் புதிரைச்
சுவைத்து
மெத்த மகிழ்வுற்ற நாட்கள் பலவுண்டு
விடியலில் புதிர்களிடும் புள்ளிக்கோலங்கள்
முத்தாய் தெறித்திடும் முற்றத்தில்
முரண்டு பிடிக்கும் புதிர்களுமுண்டு
திரண்டு வரும் திரட்டு பாலுமுண்டு
வற்றாத சோலையிது
திகட்டாத தேனமுது
நித்தமும் துயிலெழுப்ப
பூபாள மிசைக்கும்
இன்று போல் என்றும் நம்
உள்ளத்தில் உவகைக்கு
வித்திட விழைகின்றேன் பித்தாய் மாறினோம் புதிர்களால்
சத்தான வெடிகளை
விருந்தாய் படைத்திடும்
குன்றின் விளக்காம்
அன்பர் வாஞ்சியாருக்கும்
உதிரிப்பூக்களை
சரமாய் தொடுத்து
மணம் பரப்பும்
குழு உறுப்பினர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஒராண்டை கடந்து
வெற்றிநடைபோடும்
உதிரிவெடி குழு
ஆல் போல் வளர்ந்து இமயத்தைத் தொட
இந்நாளில் வாழ்த்திடுவோம்
வையத்துள் புகழுடன்
வாழ்க! வளர்க!
💐🙏💐
எம்கேயார்
Bangalore. 01-01-2019
Love Shayari Hindi