Skip to main content

விடை 3181

** இன்று காலை வெளியான வெடி (3181):
சத்தியமாய் அடிக்கப்படும் மலர் அணிய இறுதி விருப்பம்  (3)
இதற்கான விடை:  சூடம் = சூட + ம்; சூட = மலர் அணிய;  ம்  = இறுதி விருப்பம்.

சூடம் அடித்து சத்தியம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு வழக்கம்.

Comments

Raji said…
*சூடம்* ஏற்றி வாகை சூடியவர்கள் (40)
----------------------------------------------------------
1 6:03:21 ஶ்ரீவிநா
2 6:03:23 ரா. ரவிஷங்கர்
3 6:04:41 சங்கரசுப்பிரமணியன்
4 6:04:58 லக்ஷ்மி ஷங்கர்
5 6:08:18 கி.பாலசுப்ரமணியன்
6 6:09:28 ரவி சுப்ரமணியன்
7 6:10:32 ராஜி ஹரிஹரன்
8 6:13:23 விசீ சந்திரமௌலி
9 6:16:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10 6:21:59 ராஜா ரங்கரஜன்
11 6:22:59 எஸ்.பார்த்தசாரதி
12 6:31:25 முத்துசுப்ரமண்யம்
13 6:34:42 ஆர்.நாராயணன்.
14 6:42:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
15 6:45:32 அம்பிகா
16 6:52:40 இ.பத்மா
17 6:55:49 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18 6:56:53 மீனாக்ஷி கணபதி
19 6:57:20 ஶ்ரீதரன்
20 7:06:22 சித்தன்
21 7:10:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22 8:07:39 பினாத்தல் சுரேஷ்
23 8:11:26 கேசவன்
24 8:19:59 நாதன் நா தோ
25 8:29:58 ராதா தேசிகன்
26 8:53:16 மு.கஇராகவன்
27 9:00:44 ஜீவமோகன்
28 13:51:10 சதீஷ்பாலமுருகன்
29 14:51:20 சாந்திநாராயணன்
30 15:53:31 பாரதி
31 15:54:48 தேன்மொழி
32 16:06:02 ரங்கராஜன் யமுனாச்சாரி
33 16:12:06 ரமணி பாலகிருஷ்ணன்
34 16:14:46 C S செல்வராஜ்
35 17:07:35 கல்யாணி தேசிகன்
36 17:49:22 ஸௌதாமினி
37 17:51:55 ஸந்தியா
38 18:52:02 பானுபாலு
39 20:15:05 விஜயா ரவிஷங்கர்
40 20:21:06 ரவி சுந்தரம்
Raghavan MK said…

சூடம் காட்டுதல்

குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்? 

ஆன்மீகம் -
திருட்டி கழியும். 


அறிவியல் -
அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.
Raghavan MK said…


சூடிக்கொடுத்தவளுக்கு, *சூடம்* ஏற்றி தொழுதேன் 🙏🏼
Vanchinathan said…
வாகை சூடியோரின் பட்டியல் வெளியிட்ட ராஜி ஹரிஹரனு க்கு நன்றி.
Chittanandam said…
'சூட' என்பதற்கான குறிப்பு 'மலர் அணிய' என்பதுதானே? - நங்கநல்லூர் சித்தானந்தம்
ரொம்ப நேரம் பூரம் ன்னு தொங்கினேன். மலர் = பூ , இறுதி விருப்பம் = ம் ர மட்டும் வரல்ல. அதனால "ஆத்தா, நான் பெயிலாயிட்டேன்" ன்னு விட்டுட்டேன். அப்புறம் கடைசியா ஒரு முயற்சி. பட்டா பாக்கியம் படாட்டி  லேகியம் ன்னு பண்ணினேன். இந்த வாட்டி மாட்டிச்சு.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.