Skip to main content

விடை 3197

இன்றைய (24/01/2018)  வெடி:
பெண்ணின் தலை சீவ முடியும் நேரம் நாலே முக்காலாக இருக்கலாம் (4)

இதை  மூன்று பகுதியாக உடைக்கலாம்:
பெண்ணின் தலை சீவ | முடியும் நேரம் | நாலே முக்காலாக இருக்கலாம் (4)
முதல் பகுதியை "பின்ன" என்று கொள்ளலாம்.
இரன்டாம் பகுதியை "ம்" என்று கொள்ளலாம்.
இவை சேர்ந்தால் கிடைப்பது பின்னம், உதாரணமாக நாலே முக்கால். (இருக்கலாம் என்று சொன்னது பின்னத்திற்கு உதாரணம் இதுவும் ஒன்று என்று உணர்த்தவே).

எனவே விடை: பின்னம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (10):

6:37:26 ரவி சுந்தரம்
6:48:27 லக்ஷ்மி ஷங்கர்
6:50:42 ஆர்.நாராயணன்.
7:23:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7:44:02 சுந்தர் வேதாந்தம்
7:56:40 எஸ் பி சுரேஷ்
8:16:04 ராஜி ஹரிஹரன்
9:38:58 ரவி சுப்ரமணியன்
10:17:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
20:14:23 கேசவன்
**********************

"தலை", "சீவ" என்ற சொற்கள் "முதலெழுத்தை அகற்று" எனும் பொருளில் இல்லாமல் நேரடி பிரயோகமாக இருந்ததால் சற்று குழப்பம் உண்டானது. Nice misdirection.
Muthu said…
சுவையான கட்டமைப்பும் விளக்கமும். ஒரு சந்தேகம்: முக்கால் ஒரு பின்னம். நாலேமுக்கால் பின்னமாகுமா?

கூட்டு பின்னம் (compound fraction).
Vanchinathan said…
ஆங்கிலத்தில் இதன் பெயர் improper fraction, its value > 1
Vanchinathan said…
காலை. பாலசுப்ரமணியன் மின்னஞ்சல் வழி அனுப்பிய கருத்துக்கள் :

வாஞ்சி,
இன்றைய வெடியில் நிறைய குறைகள் உள்ளன. சீவுவது பின்னுவதாகாது. தற்கால பெண்கள் தலை சீவுகிறார்கள், பின்னுவதில்லை. மேலும் நாலேமுக்கால் பின்னமாகாது,அதில் முக்கால் மட்டுமே பின்னப்பகுதி .19/4 என்று எழுதும்போது மட்டுமே அது பின்னம். 4 3/4 என்பது கலப்பு எண்.

கி.பா

இன்றைய வெடியில் நிறைய குறைகள் உள்ளன. சீவுவது பின்னுவதாகாது. தற்கால பெண்கள் தலை சீவுகிறார்கள், பின்னுவதில்லை. மேலும் நாலேமுக்கால் பின்னமாகாது,அதில் முக்கால் மட்டுமே பின்னப்பகுதி .19/4 என்று எழுதும்போது மட்டுமே அது பின்னம். 4 3/4 என்பது கலப்பு எண்.

கி.பா

Vanchinathan said…
அவ்வப்போது நான் ஏதாவது குறைகள் மலிந்து புதிர் செய்து விடுகிறேன். இன்று 25 ஜனவரி கவனமாக செய்தது குறையற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Raji said…
"தலையை வாரிக்கோ " என்றால், வெறும் சீப்பு எடுத்து வாரிக்கொள்வது அர்த்தம் ஆகாது
தலையை "பின்னிக்கோ" அல்லது "முடிஞ்சுக்கோ " என்று தான் அர்த்தம் ஆகும்.
நேற்றைய வெடி was very very interesting, because as a sentence it created a very good meaning. பொதுவாக சாயங்காலம் 4:45 , 5 மணி போல தான் தலையை வாரி முகம் அலம்பி, ஸ்வாமிக்கு விளக்கேற்ற தயாராகுவார்கள் (என் பாட்டி, அம்மா, மாமியார் ...)
So as a puzzle it did what it usually does. It thoroughly misled everyone. :-) in a nice and cryptic way.


Raji said…

பெண்களில் என்ன தற்கால பெண்கள் அந்தக்கால பெண்கள்? தற்கால பெண்கள் தாலி அணிந்து கொள்வதில்லை என்பதால், பெண்கள் கழுத்தினில் அணிவது "சரடு" ஆகாது என்று சொல்ல முடியுமா ?
Just my 2 cents

Vanchinathan said…
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன: அடியோடு போய்விட்ட பழக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது "அந்தக்காலத்தில்" என்று சேர்ப்பது சரியாகும். எழுத்தாணி, பனையோலை இவற்றைப் பழங்கால "ஸ்டேஷனரி" (இதர்குத் தமிழ்ச் சொல் என்ன?) என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு இன்றைய காலத்தில் நன்றாகப் படித்து குளுகுளு அறையில் பணிபுரிபவர்கள் தலையைப் பின்னாமல் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலான பெண்கள், அங்காடிகளில் சிறிய வேலை செய்யும் பெண்கள் இன்னமும் பின்னல் பின்னிக் கொண்டுதான் இருக்கிறார்கள். (நான் தினமும் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கும் கடையில் பார்க்கிறேன். இதற்கு மேல் சொன்னால் என் வீட்டுக் காரம்மா என்னைப் பின்னிவிடுவார்கள்!)

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்