இன்று காலை வெளி வந்த வெடி எண் 3178:
குத்தகைக்கு முன்பு துளையிட்ட துளையிட்டு துளை (4 )
அதற்கான விடை: துவாரம் = து + வாரம். து = துளையிட்ட துளை.
வாரம் என்றால் குத்தகை (lease)
(எங்கள் வண்டியையும் மாட்டையும் வாரத்துக்கு விட்டிருக்கோம்).
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1/6/2018 6:04:23 ரா. ரவிஷங்கர்.
1/6/2018 6:09:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/6/2018 6:27:50 ரவி சுந்தரம்
1/6/2018 6:49:54 சங்கரசுப்பிரமணியன்
1/6/2018 7:43:50 கு.கனகசபாபதி, மும்பை
1/6/2018 7:55:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/6/2018 8:12:01 முத்துசுப்ரமண்யம்
1/6/2018 8:34:28 ஆர்.நாராயணன்.
1/6/2018 8:42:14 ராதா தேசிகன்
1/6/2018 20:23:32 செந்தில்
1/6/2018 20:25:57 சதீஷ்பாலமுருகன்
1/6/2018 21:10:47 மு.க.இராகவன்
துளையை துளைத்து து வந்தது!
ஆக மொத்தத்தில் விசு தோற்றார் வாஞ்சியாரிடம்!
Todays vedi has been compiled nicely, confusing the solvers!
கிழக்கிந்திய கம்பெனி திருநெல்வேலி சீமையை நிர்வாகம் செய்த விதம் பற்றி ஒரு விரிவான கட்டுரை படித்தேன். புறம் போக்கு நிலம், அதில் இருக்கும் பனை புளி மரங்கள், குட்டைகளில் மீன் பிடித்தல் போன்ற எல்லா வருமான சாத்தியக் கூறுகளையும் ரெவின்யூ அதிகாரி கணக்கிடுவார். பிறகு அந்த உரிமைகளை குத்தகைக்கு விடுவார். குத்தகைக்கு எடுப்பவர் குத்தகைப் பணம் "வாரம்" கம்பெனிக்கு கட்ட வேண்டும். பொதுவாக குத்தகைக்காரர் அவரே இந்த வேலைகளை செய்ய மாட்டார். இந்த வேலைகளை குடியானவருக்கு செய்ய கொடுப்பார். கிடைக்கும் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பகுதி மேல்வாரம், குத்தகை காரருக்கு. ஐந்தில் இரண்டு பாகம் கீழ்வாராம் குடியானவருக்கு. ஐந்து ஒரு பாகம் காவல். காவல் பணம் தலையாரிக்கு கொடுக்கவேண்டும். எந்த எந்த ஜாதிகள் குத்தகைக்கு எடுக்கும், எந்த ஜாதிகள் குடியானவ வேலை செய்யும், குத்தகை உரிமை அடமானம் வைத்தல், போன்ற பல விவரங்கள் இருந்தன. ஒரு இங்கிலாந்து பல்கலை கழக முனைவர் ஆராய்ச்சி கட்டுரையாக இருபதாம் நூற்றாண்டில், கம்பெனி மூல ஆவணங்களை படித்து எழுதப்பட்டது.
மேற்கண்ட தகவலை நமக்களித்து உதவியவர்
திரு.இரவிசுந்தரம் அவர்கள்.
வட்டி எதுவும் கிடையாது. பெரும்பாலும் போக்கியம் வீடு போன்ற சொத்துக்களுக்கு உபயோகமாகிறது.