Skip to main content

விடை 3178


இன்று காலை வெளி வந்த வெடி  எண் 3178:
குத்தகைக்கு முன்பு  துளையிட்ட துளையிட்டு   துளை (4 )

அதற்கான விடை:  துவாரம் = து + வாரம்.  து = துளையிட்ட துளை.
வாரம் என்றால் குத்தகை (lease) 
(எங்கள் வண்டியையும் மாட்டையும் வாரத்துக்கு விட்டிருக்கோம்).
 

Comments

Vanchinathan said…
சரியான விடை கண்டு பிடித்தவர்கள் 12 பேர்
1/6/2018 6:04:23 ரா. ரவிஷங்கர்.
1/6/2018 6:09:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/6/2018 6:27:50 ரவி சுந்தரம்
1/6/2018 6:49:54 சங்கரசுப்பிரமணியன்
1/6/2018 7:43:50 கு.கனகசபாபதி, மும்பை
1/6/2018 7:55:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/6/2018 8:12:01 முத்துசுப்ரமண்யம்
1/6/2018 8:34:28 ஆர்.நாராயணன்.
1/6/2018 8:42:14 ராதா தேசிகன்
1/6/2018 20:23:32 செந்தில்
1/6/2018 20:25:57 சதீஷ்பாலமுருகன்
1/6/2018 21:10:47 மு.க.இராகவன்
Ramiah said…
துளையிட்ட துளை = து எப்படி வந்தது புரியவில்லை.
Raghavan MK said…

துளையை துளைத்து து வந்தது!
Vanchinathan said…
"துளை"யில் ஓட்டை போட ளை உதிரிந்து து மட்டும் மிச்சம்.
Raghavan MK said…

ஆக மொத்தத்தில் விசு தோற்றார் வாஞ்சியாரிடம்!
Ramiah said…
துளையிடுவது என்றால், வார்த்தையின் நடுப்பகுதியை நீக்குவது என்று நினைத்திருந்தேன்.
Raghavan MK said…

Todays vedi has been compiled nicely, confusing the solvers!
Raghavan MK said…

கிழக்கிந்திய கம்பெனி திருநெல்வேலி சீமையை நிர்வாகம் செய்த விதம் பற்றி ஒரு விரிவான கட்டுரை படித்தேன். புறம் போக்கு நிலம், அதில் இருக்கும் பனை புளி மரங்கள், குட்டைகளில் மீன் பிடித்தல் போன்ற எல்லா வருமான சாத்தியக் கூறுகளையும் ரெவின்யூ அதிகாரி கணக்கிடுவார். பிறகு அந்த உரிமைகளை குத்தகைக்கு விடுவார். குத்தகைக்கு எடுப்பவர் குத்தகைப் பணம் "வாரம்" கம்பெனிக்கு கட்ட வேண்டும். பொதுவாக குத்தகைக்காரர் அவரே இந்த வேலைகளை செய்ய மாட்டார். இந்த வேலைகளை குடியானவருக்கு செய்ய கொடுப்பார். கிடைக்கும் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பகுதி மேல்வாரம், குத்தகை காரருக்கு. ஐந்தில் இரண்டு பாகம் கீழ்வாராம் குடியானவருக்கு. ஐந்து ஒரு பாகம் காவல். காவல் பணம் தலையாரிக்கு கொடுக்கவேண்டும். எந்த எந்த ஜாதிகள் குத்தகைக்கு எடுக்கும், எந்த ஜாதிகள் குடியானவ வேலை செய்யும், குத்தகை உரிமை அடமானம் வைத்தல், போன்ற பல விவரங்கள் இருந்தன. ஒரு இங்கிலாந்து பல்கலை கழக முனைவர் ஆராய்ச்சி கட்டுரையாக இருபதாம் நூற்றாண்டில், கம்பெனி மூல ஆவணங்களை படித்து எழுதப்பட்டது.
Raghavan MK said…


மேற்கண்ட தகவலை நமக்களித்து உதவியவர்
திரு.இரவிசுந்தரம் அவர்கள்.
குத்தகைக்கும் வாரத்திற்கும் சிறிது வித்தியாசம் உண்டு. குத்தகை என்பது Lease that means a fixed quantity or value is given to lessor every period, வாரம் என்பது crop sharing, that is the quantity or value will depend upon the crop yield for a particular period. Varam can be loosely called as குத்தகை. மற்றொரு விதமான குத்தகை 'போக்கியம்' எனப்படும். இதில் , போக்கியம் எடுப்பவர் ஒரு மொத்த தொகையை கொடுத்து விட்டு சொத்தை முழுமையாக அனுபவிக்கும் உரிமையை பெறுகிறார் .
வட்டி எதுவும் கிடையாது. பெரும்பாலும் போக்கியம் வீடு போன்ற சொத்துக்களுக்கு உபயோகமாகிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்