Skip to main content

உதிரிவெடி 3184

** இன்றைய (12 ஜனவரி  2018) உதிரி வெடி -- வாஞ்சிநாதன்

முதலில்  நேற்றைய வெடி கதையை முடித்து விடுவோம்.
மொத்தம் வந்த 50க்கும் மேற்பட்ட விடைகளில் 30 பேர் அவலம் என்ற தவறான விடையளித்திருந்தனர்.  சரியான விடை வந்ததும் இப்படி ஒருவர்
அப்பீலே இல்லை. பாதகம் தான் சரியான விடை. ஆத்தா இன்னிக்கு பெயில் ஆயிட்டேன், இந்த அவலத்தை எங்க போயி சொல்லுவேன்?
என்று கருத்துரை அளித்திருந்தார்:

சரியாக விடையளித்தவர்களில் ஐந்தாறு பேர் முதலில் அவலம் என்று விடையனுப்பி அப்புறமாக மாற்றினார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கும் அதே போல் நினைத்து வெளியில் சொல்லாதவர்க்கும் இந்த சிந்தியல் வெண்பா:

தோற்ற துயரில் துவண்டிட்ட ஆர்வலரே
மாற்றி விடைகண்ட மாந்தரும் உண்டங்கே
நூற்றுக்கு நூறில்லை காண்.

சரி இன்றைய வெடிக்கு வருவோம்:

ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4)


Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்