Skip to main content

விடை 3199

இன்று காலை வெளிவந்த வெடி 3199
பொம்மை சுமப்பவன் முதலில் காலில்  காலில் அணிவது (3)
இதற்கான விடை:  கொலுசு = கொலு (பொம்மை)  + சு

கொலு என்றால் பொம்மைதானா என்று  சிலர் கேள்வி கேட்கிறார்கள்.
 கொலு மாதிரி  அசையாமல்  உட்கார்ந்திருக்கிறாயே என்று பேசுவதைக் கேட்டு நான் இதை  அமைத்தேன்.
 அகராதியில்   கொலு மண்டபம் என்றால் royal court  என்றும்  கொலுவீற்றிருத்தல்  என்றால் பொம்மையுடன் தொடர்பில்லாத   பொருளளையும்  கொடுத்திருப்பதால்  இது விவாதத்திற்குள்ளாகலாம்.  விஷயம் அறிந்தவர்கள் கருத்துரையில்  சொல்லலாம்.

Comments

Raghavan MK said…

சுமந்தவன் காலில் அணிந்து விடை தந்தான்,

ஆயினும் ,


கொலுவில் தான் பொம்மையை காண்போம்!


ஆனால்,

பொம்மையில் கொலுவை காணமுடியுமா ???
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

6:02:10 ஶ்ரீவிநா
6:02:12 லட்சுமி சங்கர்
6:09:48 எஸ்.பார்த்தசாரதி
6:13:20 வி ன் கிருஷ்ணன்
6:15:08 விஜயா ரவிஷங்கர்
6:16:53 கி. பாலசுப்ரமணியன்
6:17:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:17:54 சாந்திநாராயணன்
6:22:05 ஆர்.நாராயணன்.
6:24:39 ரா. ரவிஷங்கர்
6:25:58 ரவி சுந்தரம்
6:27:41 விசீ சந்திரமௌலி
6:28:32 ரவி சுப்ரமணியன்
6:30:10 ஶ்ரீகோமதி
6:37:12 ராஜி ஹரிஹரன்
6:54:06 மீனாக்ஷி கணபதி
7:14:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:19:02 ராஜா ரங்கராஜன்
7:39:18 ஆர். பத்மா
7:53:24 அம்பிகா
8:18:39 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9:26:23 ரங்கராஜன் யமுனாச்சாரி
9:50:51 அன்பன்
9:54:11 கேசவன்
10:02:04 இரா.செகு
10:13:52 கு.கனகசபாபதி, மும்பை
10:14:07 நாதன் நா தோ
11:23:02 ருக்மணி கோபாலன்
11:48:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12:17:03 மு.க.இராகவன்
12:56:08 ஸௌதாமினி
13:05:07 சதீஷ்பாலமுருகன்
13:20:36 ரமணி பாலகிருஷ்ணன்
14:49:30 சுபா ஸ்ரீநிவாசன்
16:13:37 K.R.Santhanam
17:25:44 முத்துசுப்ரமண்யம்
17:41:33 Bharathi
18:03:54 சுந்தர் வேதாந்தம்
19:00:37 எஸ் பி சுரேஷ்
**********************
Raghavan MK said…

விடை

இன்று காலை வெளிவந்த வெடி 3199

""பொம்மை சுமப்பவன் முதலில் காலில் காலில் அணிவது '"

"காலில் அணிந்து கொள்வது''
என்றிருக்க வேண்டும்
Chittanandam said…
பொம்மமை என்னும் சொல் கொலு என்கிற சொல்லுக்கு ஈடாகுமா? Highly doubtful. பொம்மைகளின் வரிசைதானே கொலு? ரவிக்கள் விளக்குவார்களாக!
Raghavan MK said…

ஈடாகது!
பொம்மைகள் தான் கொலுவை உண்டாக்கிறது!

"கொலு பொம்மை மாதிரி உட்கார்ந்து இருக்கிறாயே
? ",
கொலு வேறு பொம்மை வேறு!
Muthu said…
பொம்மையிலிருந்து கொலுவுக்குப் போகக் கொஞ்சம் கடினமாகத்தான்
இருந்தது. வெகு நேரம் யோசித்து அனேகமாக விட்டுவிட்டேன். தூங்கி எழுந்திருக்கும் சமயம் (இங்கு காலை 5:30) திடீரென்று கொலுசு நினைவில் வந்து, அதுதான் அதிகப் பொருத்தம் என்று உடனே எழுந்து வந்து விடை அனுப்பினேன்.

அகராதிகளும், தேடல்களும் உதவவில்லை. ஆனால், பொம்மை என்பது கொலுவிற்கு ஆகு பெயராக ஆக்லாம் என்று தோன்றுகிறது. சினை ஆகு பெயர்? இலக்கியத்தில் அதிகம் பரிச்சயம் இல்லை; யாரேனும் சிறுகதையிலோ, கவிதை/காப்பியத்திலோ கொலுவிற்குப் பொம்மையைப் பயன் படுத்தி இருப்பதற்கு ஆதாரம் இருந்தால் தெரிவிக்கவும். தற்காலக் கதை/புதினங்களில் கதாபாத்திரம் பேசும்பொழுது கொலுவைக் குறிக்க பொம்மை என்று சொல்லியிருக்கலாம்!
Suba srinivasan said…
கொலு என்றால் பொம்மையா? இல்லை.
(என்னால் எல்லா கணினிகளிலிருந்தும் கருத்திட முடிவதில்லை. கூகுள் ஜிமெயில் லாகின் ன்னு என்னமோ குத்தம் சொல்லுது. ) கொலு பொம்மை அல்ல என்று ஒரு விவாதம் வரும் என்று எதிர்பார்த்தேன்.

கொலு போல அசையாமல் இருந்தான். பொம்மை போல அசையாமல் இருந்தான். ஒரு விதத்தில் சரி என்று பட்டால் கூட, திருப்தியாக இல்லை.
பொம்மைகள் என்று சொல்லியிருந்தால் ஓரளவு கொலுவுக்கு நெருக்கமாக இருந்திருக்கும்.
Unknown said…
சரியாக சொன்னார் சித்தாந்தம் அவர்களே...கொலு is royal dignified presence ... அம்மன் கொலுவீற்றிருந்தாள் ....எப்படி பொம்மையாகும் 🧐🤔🤔

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்