Skip to main content

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது.
வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு:

1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார்.
இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே.
இங்கே தொடங்கித் தேடவும்:
http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html
பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4)

2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி:
http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current
அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு:
கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5)
முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5)


3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவிதமான  விளையாட்டுகளை அவருடைய பதிவில் தொடர்ந்து 5 வருடங்களாக அளித்து வருகிறார்.
https://muthuputhir.blogspot.com/
அவருடைய உருவாக்கத்தில் ஒரு புதிர்:
நித்தம் வரும் நிலவு வருத்தம் போக்கித் தரும் மன அமைதி. (4)

4. உருவாக்குவதற்குக் கடினமான புதிர்கள் என்று நான் கருதுவது திரைஜாலம் வலைப்பதிவில் ராமராவ் அவர்கள் அளித்துவரும் புதிர்கள். அதற்குப் பலர் விடையும் கண்டுபிடித்துவிடுகிறார்கள். நான் ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன்: பல திரைப்படப் பாடல்கள், படங்கள் தெரிந்தும் ராமராவின் புதிர்களுக்கு  என்னால் ஒருமுறை கூட விடை கண்டுபிடிக்க முடிந்ததில்லை.
http://thiraijaalam.blogspot.in

5. வைத்யநாதன் என்பவரும் புதிர்களைப் பல வருடங்களாக‌ வெளியிட்டு வருகிறார்:
http://ramavnathan.blogspot.in/
அவருடைய படைப்பிலிருந்து ஒன்று:
வந்தது யாரென அறிய கிலி கலந்த விளி (3)

6. இன்னொரு வலைத்தளம்:
https://ilakyaa.wordpress.com


முத்து சுப்ரமண்யம் கருத்துரையில் சொல்லியிருப்பது போல் யோசிப்பவர், நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், குன்னத்தூர் சந்தானம் இவர்களும் ஹரி பாலகிருஷ்ணன் அளித்துள்ள கட்டவலையை அளிக்கும் மென்பொருள் கொண்டு பல புதிர்களை அளித்துள்ளார்கள்.

பூங்கோதை என்பவரும் சில புதிர்களைச் செய்திருக்கிறார். அத்ற்கான வலை முகவரி தெரிந்தால் சொல்கிறேன். அவருடைய புதிர்களில் ஏழெட்டு வருடங்கள் ஆன பின்னும் நினைவில் நிற்கும் அழகானவை:
ராமன் எத்தனை வருடம் காட்டுக்குப் போனால் என்ன? அர்ஜுனன் செத்தால் திரௌபதிக்கு என்ன? (5)

வலையில் எழுதினேன். கணவனைத் துறந்தேன் (6)


எல்லா விதமான புதிர்வகைகளையும் ஒரு வட்டமடித்து வாருங்கள்!

Comments


சுவாரசியமான தொகுப்பு. நன்றி.

"வந்தது ... விளி (3)" என்ற புதிருக்கு விடை தெரியவில்லையே!
Ramiah said…
http://www.puthirmayam.com/main/crossword-1/

இது இன்னும் ஒரு சுவாரசியமான தொகுப்பு, குறுக்கெழுத்துக் கட்டமைப்பு, நிரப்பத்தக்கது அமைக்கவும் முடியும்.திரு, பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது.
Muthu said…
திரு. ராமையா நாராயணன் குறிப்பிட்டிருக்கும் புதிர்மயம் ஒரு அருமையான
மென்பொருள். ஒரு சாதாரண குறுக்கெழுத்துப் புதிர் தீர்க்கும் மனிதனான என்னைப் புதிர் அமைக்க ஊக்கம் அளித்தது இந்த மென் பொருளும், யோசிப்பவர் தூண்டலுமே. திரு. குன்னத்துர் சந்தானம், திரு. நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், திரு. வைத்தியநாதன் இவர்களும் இந்த புதிர்மயம்
மென் பொருள் கொண்டு புதிர் அமைத்தார்கள்.
Muthu said…
மேற்கூறிய பல புதிராளிகளின் பல்வகைப் புதிர்களும் கீழே உள்ள
இரண்டு தளங்களிலும் காணலாம். இந்த் இரண்டு குழுமங்களின் தளங்களும் “உயிருடன்” இருக்கின்றன. குறுக்கும்நெடுக்கும் முனைவ்ர். வாஞ்சிநாதன் அவர்களால் தொடங்கி நடத்தப் பட்டது. வார்த்தை-விளையாட்டு “யோசிப்பவ்ர்” தொடங்கியது.

பூன்கோதை அவர்களின் குறுக்கெழுத்துப் புதிர்கள் என்னை முந்தி விட்டன. நான் இவற்றைப் பற்றி அறியவருகையில் அவர்கள் குறுக்கெழுத்துப் புதிர் அமைப்பதை நிறுத்தி விட்டார். அவர்களின் பல புதிர்களில் “குறள்வளை” மிகுந்த சவால் அளித்தன. திருக்குறள் ஒன்ரினை எடுத்து, அதில் உள்ள எழுத்துக்களை வைத்து வேறு “குறள்” அமைத்து, மூலக் குறளைக் கண்டுபிடிக்கச் சொல்வார்!

https://groups.google.com/forum/?hl=ta#!forum/kurukkumnedukkum
https://groups.google.com/forum/?hl=ta#!forum/vaarthai_vilayaatu

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்