இன்று காலை வெளியான புதிர்:
களங்கம் உடையான் அம்மணமாய்ப் புற்றில் வாழ்வது! (4)
அதற்கான விடை: கறையான் = கறை + உடையான் - உடை
கறை = களங்கம்
கறையான் = புற்றில் வாழும் உயிரினம்.
(கரையான் என்றும் சில சமயம் இது எழுதப்படுகிறது. ஆனால் இப்புதிருக்கு களங்கம் என்ற பொருளுள்ள சொல் தேவை என்பதால் கறையான்தான் சரியான விடை.)
இப்புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்களை இங்கே சென்று காணலாம்.
Comments
கரையான்
karaiyāṉ n. id. Fishermanliving near the sea-coast; கடற்கரைப்பக்கத்துவாழும் வலைஞன்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கறையான்
கறையான் (p. ) [ kaṟaiyāṉ ] ஆழல், சிதலை, செல்
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=கரையான்
தீவான் (p. ) [ tīvāṉ ] கரையான்.
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கறையான்
சொல்
அருஞ்சொற்பொருள்
கறையான் செல்லு , சிதல் .
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்
கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .
யோசித்தபோது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் எதோ மாமுனிவரே அறியேன் (MKT நடித்த திருநீலகண்டர் படம்)
(https://www.youtube.com/watch?v=9bB8AI1v9Hg)
இதன் அனுபல்லவியில்
"கறையான் தின்றதோ கள்வன் கவர்ந்து சென்றானோ " என்று வரும்.
மறைவாய் என்பதற்கு rhyme ஆக இருப்பது கறையான் (கரையான் அல்ல)