Skip to main content

விடை 3785

இன்று காலை வெளியான புதிர்:
வெறும் சம்பிரதாயத்துக்கு   வடிவத்தைப் போக்கி  உருக்கு  முன்னே இணங்கு (5)
அதற்கான விடை:  
ஒப்புக்கு = ஒப்பு (இணங்கு)  + உருக்கு - உரு

இரண்டு நாட்கள் முன்பு  இந்து ஆங்கில செய்தித்தாளில் வெள்வந்த புதிரில் ஒரு வெடி, ஜப்பானிய வீர்கள் தங்கள் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கான சொல்லான செப்புக்கு என்ற விடை வருமாறு அமைக்கப்பட்டிருந்தது.
செப்புக்கு  என்பது கேட்பதற்குத் தமிழ் போல் இருந்தது. இரண்டு மூன்று முறை அதைச் சொல்லி பார்த்துக் கொண்டேன், "செப்புக்கு, தப்புக்கு,  ஒப்புக்கு" என்று வாயில் வார்த்தை வந்தது. அதிலொன்றைப் பிடுத்துக் கொண்டு இன்று புதிராக்கிவிட்டேன்.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இப்பக்கம் செல்லவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்