Skip to main content

விடை 3792

இன்று காலை வெளியான புதிர்:
கையிடுக்கில் அலைய அணுவைப் பிளந்து வரும் சக்தியின் வெளிப்பாடு  (7)

அதற்கான விடை:  கதிரியக்கம் = கக்கம் + திரிய


(புளூடோனியம், யுரேனியம் போன்ற தனிமங்கள் சிதைந்து வெளிவரும் ஆற்றல்)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று பார்க்கவும். 

Comments

Raghavan MK said…
அருமையான புதிர்.
நாகேஷ் பாடிய பாடல் விடை காண உதவியது.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது
_*கக்கத்திலே* தூக்கி வச்சாக் கத்தலையே என்னது_
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே

Well constructed riddle!
💐👏🏼💐
Muthu said…
கையிடுக்கில் அலைய வைத்து கதிரியக்கம் வெளிப்படுத்தும் திறமை கண்டு வியக்கிறேன்!
Vanchinathan said…
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் முதல் வரிக்கு மேல் கேட்டதில்லை.

கதிரியக்கத்தை கையிலே அடக்க முடிந்தால் ஆபத்து இருக்காதே
Muthu said…
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் வரிகள்:
https://tinyurl.com/y39qra4m

இங்கு கண்டும் கேட்டும் மகிழவும்:
https://youtu.be/ujMYkmG6cqA?t=2
திரைப்படம்:- அனுபவி ராஜா அனுபவி;
(அய்யா பிலிம்ஸ்; - K.V.S. அளிக்கும்)
ரிலீஸ்:- 1967;
இசை:- M.S. விஸ்வநாதன், உதவி:- R.கோவர்த்தனம்;
பாடல்:- கவிஞர் கண்ணதாசன்;
பாடியவர்:- T.M. சௌந்தரராஜன்;
நடிப்பு:- நாகேஷ்;
கதை:- இராம. அரங்கண்ணல் MLA;
துணை வசனம்:- N. பாஸ்கரன்;
தயாரிப்பு:- V.R.அண்ணாமலை, M.RM. அருணாசலம்;
திரைக்கதை - வசனம் & டைரக்சன்:- K. பாலசந்தர்.
Vanchinathan said…
நன்றி. எம் எஸ் விஸ்வநாதன் பாட்டா? நிச்சயம் கேட்டுவிடுகிறேன்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்