Skip to main content

விடை 3788


(ஒரு முக்கிய வேலையை முடித்து விட வேண்டியிருந்ததால் இப்போதுதான் விடையை வெளியிட முடிந்தது)ப்.

இன்று காலை வெளியான புதிர்:
நகர் உள்ளே  கிழக்கே போகும்  உவேசா தேடியது ஓயாமல் ஒலிப்பது  (2,2)
அதற்கான விடை: அலை ஓசை = அசை + ஓலை.
அசைதல் = நகர்தல்;  ஓலை = உவே சா தேடியது. அது "லை ஓ" என்று கிழக்கிலிருந்து வருமாறு எழுதப்பட வேண்டு. தவறுதலாக கிழக்கே போகும் என்று எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிரில் misdirection அதாவது திசை திருப்பி விடுவது என்பார்கள். நான் தப்பாக எழுதித்  திசை  திருப்பி விட்டேன். ஆனாலும் என்னுடைய குழப்பத்தால்   தடுமாறாமல்  பலரும் சரியாக விடையளித்து விட்டீர்கள்.
 
இன்றைய வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

இன்று கல்கியின் பிறந்தநாள் என்பதால் அவர் தான் எழுதிய கதைகளில் பெரிதும் பெருமைப்பட்ட "அலை ஓசை" விடையாக அமைத்தேன். உவேசாவும் எதிர்பாராமல் வந்து  சேர்ந்துவிட்டார்.




Comments

Nice puzzle commemorating two giants of Tamil. Interesting construction.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்