Skip to main content

விடை 3711

இன்று காலை வெளியான  வெடி
குளத்தில் இருக்கும் கடல் ஊடுருவிய பகுதியில்  அண்டா விளிம்பு உடைந்து சிதைந்தது  (3)
இதற்கான விடை : குவளை (அல்லிப்பூ) =  வளைகுடா - டா

(வளைகுடா = கடல் ஊடுருவிய பகுதி)

இக்கோடையில் மே மாதம் முழுவதும் சென்னை வெயிலை அனுபவித்த பிறகு ஜூன் மாதம் பிறந்ததிலிருந்து  இது வரை ஜெர்மனி தேசத்தின் பெர்லின் நகரில் இருந்துவிட்டு  இன்று திரும்பி வந்தேன்.  இத்தனை நாட்கள் பெர்லினில் அண்டா அளவு தண்ணீரில்  குளித்துவிட்டு
கடல் தாண்டி வளைகுடா நாடுகள் மேல் பறந்து  மீண்டும் சென்னைக்கு  வந்த பின் சிக்கனமாக ஒரு குவளை நீரில் குளித்து விட்டேன்!

(இப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது)

தண்டின்மேல் அல்லி குளம்விரிய  தான்சிரிக்கும்
பெண்டிரின்  பிச்சிப்பூ கூந்தலில்  வண்டுறையும்
கொண்டாடி என்வெண்பா  கொப்பளிக்க,  நீராட
அண்டா அளவின்றேல் என்?


(பிச்சிப்பூ = ஜாதி மல்லிகை)
தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு! வெண்பாவும் திரும்பி வந்திடுச்சு!!

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments