Skip to main content

விடை 3716

இன்று காலை வெளியான  வெடி
பற்றி தாக்கு இறுதியாக வெற்றி வசப்படும் (4)



இதற்கான விடை: குறித்து = குத்து + (வெற்) றி
இதன் மூலம் சகலருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் வெற்றி பெறுவதற்கு நேராக வந்து ஆளைப் பற்றிக் கொண்டு  தாக்க வேண்டுமென்பதாம். வாலியை ராமன் கொன்றது போல்  தூரத்திலிருந்து ஆயுதங்களை ஏவித் தாக்குவது கூடாது என்பதாம். அமெரிக்க நாட்டினர் ட்ரோன் கொண்டு ஈரானருக்கே பறந்தபோது 225 மில்லியன் டாலர் நட்டமடைந்ததும் இப்புதிரின் யோசனையை ஏற்காததாலே என்றறியவும்.  

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.


Comments

Muthu said…
புத்திமதியைச் சிரமேற்கொண்டு வசப்படும் என்பதற்கு இணையாக "றி" யில் முடியம் 4 எழுத்துக்கள் சொல் தேடி நேரம் வீணடித்தேன். நினைத்தால் "பற்றி"க் கொண்டு வருகிறது! பற்றித்தான் பற்றினேன் பற்றினை - பற்றினைப் பற்றிய பிறகு.