Skip to main content

விடை 3712

இன்று காலை வெளியான  வெடி

ஒரு நொடியில் களையெடுத்த ஆணை சேவைக்கு செலுத்த வேண்டியது (5)

இதற்கான விடை : கட்டணம் = கணம் + கட்டளை - களை
வயல்களில் கூலி வேலை செய்ய சில எழுதப்படாத வரையறைகள்  (எந்திரங்கள் வரும் முன்னராவது) கிராமத்து சமூகங்களில் நடைமுறையில்
இருக்கின்றன. ஏர் உழுவது, அறுவடை செய்வது இதெல்லாம் ஆண்கள். களையெடுப்பது பெண்கள். இன்றைய புதிரில்  அதை மாற்றி களையெடுப்பதற்கு ஆணை அனுப்பிவிட்டோம்!

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்


Comments