இன்று காலை வெளியான வெடி:
தீனி போகுமிடம் இனிய பூமரத்தில் அலமேலுவும் துரையும் இறுதிப் பரிமாற்றம் (4)
அதற்கான விடை: இரைப்பை = இலுப்பை -லு + ரை
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்பது ஒரு பழமொழி.
இலுப்பையின் பூவில் கொஞ்சம் இனிப்பு இருப்பதால் இப்படிச் சொல்லப்படுகிறது. இம்மரத்தைப் பற்றி அறியவும் பூ, காய் இவற்றின் அழகான படங்களைப் பார்க்கவும் இவ்வலைப்பக்கத்திற்குச் செல்லவும்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
அலுப்பின்றி இப்பக்கம் அன்றாடம் வந்தீர்
இலுப்பம்பூச் சர்க்கரையை இந்நாளில் கண்டீர்
புளிப்போ டினிப்பும் புதிர்வெடியில் பாங்காய்
அளிப்பேன் அறுசுவையு மிங்கு
Comments