Skip to main content

விடை 3959


இன்று காலை வெளியான வெடி:
கெட்டுப்போன கனி பின்னே முட்டுக்கட்டை  தோலுரித்து வந்தது (6)

அதற்கான விடை: பழுதடைந்த = பழு + தடை + ந்த

(பழுதடைந்த  அந்தப் பழங்காலத்  தொலைக்காட்சிப் பெட்டியை அவன் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்)

பழு = கனி (கனிந்த மாதுளை  = பழுத்த மாதுளை என்ற சமன்பாட்டில் இருபுறமும் மாதுளையை நீக்கி இறந்த காலப் பெயரெச்சத்திலிருந்து  வேர்ச்சொல்லைப் பெறவும்!)
தடை = முட்டுக்கட்டை
ந்த = வந்தது என்ற சொல்லின் "தோலை"யுரித்த வடிவம்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Unknown said…
I took கனி as the imperative case and felt it was a nice touch in the clue. Also I liked தோலுரித்து வந்தது. One would think it applied to முட்டுக்கட்டை but
தோலுரித்து acts on வந்தது.
Nice.
Vanchinathan said…
நன்றி, கேசவன். பட்டையை உரித்து கட்டை பெறலாம். ஆனால் முட்டுக்கட்டையில் எப்படி தோலுரிக்க முடியும் என்று உங்களைக் குழப்ப வைப்பதுதான் என் எண்ணம்.
கனி - பழு. வினைச்சொல்லாகவும் கொள்ளலாம்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்