வலைக்கட்டத்தில் புதிரமைத்தால் அதற்குத் தனி அழகுதான். உதிரிவெடியமைப்பதை விட இப்புதிரை அமைப்பதிலும் ஒரு சுவாரசியமும் சவாலும் இருந்தது.
சில வெடிகளுக்கு விடைகள் மற்ற வெடிக்கான விடைகள் வலைக்கட்டத்தில் ஊடாக வருவதால் எளிதாக யோசிக்காமலே வந்து சப்பென்று ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இப்புதிரை நான்கு மணிநேரத்திற்கு கட்டங்கள் இல்லாமல் வெளியிட்டது உங்களுக்குப் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.
டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன் விளக்கங்களுடன் விடை முழுதும் எழுதியுள்ளதை இங்கே காணலாம். இப்புதிரில் இடம் பெற்ற இரண்டு அரிய சொற்களைக் குறித்து இணையத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ஒரு கட்டுரையையும் அவர் சுட்டியுள்ளார். பல அறுவைச் சிகிச்சை என்று மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரை தினசரி உதிரிவெடியையும் வந்து எட்டிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதோ விடைகள்:
குறுக்காக
3. ஒளியிழந்த வட்ட நிலவை முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3) தடவை
5. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3) தாய் மாமன்
6. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2) கைதி
7. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3) மூச்சு
8. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5) தர்மாவதி
11. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5) நிறைவேற்று
12. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3) களிறு
14. பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2) கோது
16. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5) வஞ்சிரம்
17. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3) மிரள்
நெடுக்காக
1. 6இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6) பாதாளச்சிறை
2. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர் மகள் (3) குமாரி
3. பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை அப்பாவுடன் பிறந்தவள் நீங்கிக் கலைத்தாள் (5) தன்னார்வ
4. வைரமணிந்த கையின் முனைகளில் பாய்ந்தோடுமொன்று (2) வைகை
9. தில்லையாடியின் கொடித்தாய் (6) வள்ளியம்மை
10. படித்த பெண் காய்ந்து போகக் கலந்து மதுவில் ஊற்றினாள் (5) கற்றவள்
13. குற்றமற்ற வழி பிறந்த பின் பிறந்தது கடைசி நிலா (3) மாசிலா
15. முத்துமிழ் அருவி நீரில் தெறிப்பது (2) துமி
---------------------------
இப்புதிருக்கான விடையளித்தோர் பட்டியல் இதோ. அவர்கள் எல்லோருக்கும் பாராட்டுகள். சிலர் விடுபட்டதைப் பின்னர் சேர்த்தோ, தவறைத் திருத்தியோ நான்கைந்து முறை விடை அனுப்பியதால் இப்பட்டியல் உருவாக்குவதில் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துவிடுகிறேன்.
முதல் நான்கு பேரும் வலைக்கட்டம் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் விடையனுப்பினார்கள், அவர்களுக்கு விசேஷமான பாராட்டுகள்.
திருத்தம்: விடுபட்ட பெயர்: கேசவன்
1. ராமராவ்
2. கி.பா.
3. கனகசபாபதி
4. லக்ஷ்மி மீனாக்ஷி
5. எஸ் ஆர் பாலசுப்ரமணியன்
6. ஆர் நாராயணன்
7. லக்ஷ்மி ஷங்கர்
8. மீனாக்ஷி
9. சித்தன் சுப்ரமணியன்
10. மது ராவ்
11. ராமகிருஷ்ண ஈஸ்வரன்
12. மீனாக்ஷி கணபதி
13. பினாத்தல் சுரேஷ்
14. லதா
15. வானதி
16. ஸ்ரீகிருபா
17. கே ஆர் சந்தானம்
18. சதீஷ்பாலமுருகன்
19. மீ கண்ணன்
20. அம்பிகா
21. ராம்கி கிருஷ்ணன்
22. அகிலா
23. ஹரி பாலகிருஷ்ணன்
24. சௌரிராஜன்
25. கதிர்மதி
26. பாலா.
27. சங்கரசுப்ரமணியன்
28. ராஜலக்ஷ்மி கிருஷ்ணன்
29. பானுமதி .
30 சித்தானந்தம்
31. பார்த்தசாரதி
32. ஸந்தியா
-----------------------
ஒரு பிழையுடனோ அல்லது ஒரு விடை நிரப்பாமலோ விடையனுப்பியவர்கள்:
ராஜா ரங்கராஜன், ராஜி ஹரிஹரன், மு க ராகவன் , பத்மா, மீ பாலு
கோவிந்தராஜன், நா தோ நாதன், முத்து சுப்ரமணியம்,
வி ஆர் பாலகிருஷ்ணன், இரா செகு (செந்தில்)ஸ
Comments
அடுத்ததை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🙏
*******************
மிகவும் இரசித்த புதிர்கள்
1.குற்றமற்ற வழி பிறந்த பின் பிறந்தது கடைசி நிலா = மாசிலா
2.பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை அப்பாவுடன் பிறந்தவள் நீங்கிக் கலைத்தாள்
= தன்னார்வ
3.காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன்
=வஞ்சிரம்
*******************
விடைகளுக்கான விளக்கங்கள்
குறுக்காக
3931. ஒளியிழந்த வட்ட நிலவை முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3) = தடவை
(ஒளியிழந் ( த ) வட்( ட)நில( வை )
3932. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3)
= தாய் மாமன்
வந்( தாய், மாமன்)னா
3933. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2)
= கைதி ,
[ கை(யேந்) தி ]
3934. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3)
=மூச்சு
3935. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5)
= தர்மாவதி
மாதர் தடுமாற=தர்மா; வசந்தி இடையொடிய
= வதி
3936. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5)
= நிறைவேற்று
எடை=நிறை தொடர்பில்லாத=வேற்று
3937. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3)களி+று
= களிறு
3938.பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2) =தாது
3939. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5)வஞ்சி+ ரம்(பா)= வஞ்சிரம்
3940. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3) மா(மி)யா(ர)வ(ள்)= மிரள்
நெடுக்காக
3941. 3933இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6) பாதாளச்சிறை
3942. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர் மகள் (3) எனக்(கு மாரி)யப்பனிடம்
= குமாரி
3943. பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை அப்பாவுடன் பிறந்தவள் நீங்கிக் கலைத்தாள் (5)அப்பாவுடன் பிறந்தவள்=அத்தை;
அன்னார் தவத்தை-அத்தை
= தன்னார்வ
3944. வை ரமணிந்த கை யின் முனைகளில் பாய்ந்தோடுமொன்று (2) வைகை
3945. தில்லையாடியின் கொடித்தாய் (6) வள்ளியம்மை
3946. படித்த பெண் காய்ந்து போகக் கலந்து மதுவில் ஊற்றினாள் (5)கள்+வற்ற
= கற்றவள்
3947. குற்றமற்ற வழி பிறந்த பின் பிறந்தது கடைசி நிலா (3)
வழி பிறந்த பின் பிறந்தது= மாசி (தை மாதத்திற்குபின்)+லா
மாசிலா
3948. முத்துமிழ் அருவி நீரில் தெறிப்பது (2) முத் *துமி* ழ் = துமி
*******************
புதிர் அவிழ்க்கும் கலையில் கடந்த சில ஆண்டுகளாக, ஆசிரியர் தரும் அன்றாடப் பயிற்சியின் விளைவாக- கட்டம் தருமுன்னரே ஓரிரண்டைத் தவிர அனைத்துப் புதிர்களுக்கும் விடை கண்டு விட்டேன். விடை காணாதவை : துமி ( எனக்கு இந்தச் சொல் நினைவுக்கு வரவில்லை) வைகை ( புதிரை அவிழ்க்கத் தடுமாறினேன்)!
சந்தேகமாக இருந்தது: வஞ்சிரம்.
வாலாட்டியதில், வைகை நீர் போல் கொஞ்சம் துமி தெறித்து முகம் குளிர்ந்ததே யன்றி, வஞ்சிரம் கை நழுவிச் செல்ல வில்லை,
உயிருள்ள வரை விடமாட்டேன் என்று சொல்ல முடியாத குறிப்பு, ஆசிரியரின் புதிரிலக்கண வரைமுறைகளில் இருந்து சற்றே விலகி, மிகவும் எளிமையாக அமைந்து விட்டது.
அதை ஈடுகட்டவோ என்னவோ, அன்னார் தாய் மாமன் மாரியப்பன் மாமியாரவள் வந்து பொங்கல் புதிரைக் கலகலப்பாக்கி விட்டனர்!
எடை தொடர்பில்லாக் காரியமும், கள் ஊற்றிக் கலந்த படித்தவளும், மாசிலா அழகுள்ள அருமைக் குறிப்புகள்!!
மொத்தத்தில், வாஞ்சியாரின் வலைக்கட்டப் புதிர் அறிவுக்கு மெருகூட்டி ஆனந்தம் அளித்தது என்பதே என் அனுபவம்!!
வாஞ்சியாருக்கு நன்றி!🙏
அவர்களின் விளக்கம் அருமை. பாராட்டுக்கள்
From interlocking words. I totally enjoyed solving the pongal special. These are the following
That i was able to solve first.
3932: தாய் மாமன்
3933: கைதி
3935: தர்மாவதி
3940: மிரள்
3942: குமாரி
3944: வைகை
Great clues and effort Vanchi sir. Wonder how long it must have taken you to compose the grid. Am amazed at your creativity.
And Thanks to Mr Balakrishnan for the grid.
எனக்கு இரண்டு விதமாக எழுதுவதையும் பார்த்துக் குழப்பம் இருந்தது. நானாகவே "மத்யமாவதி" என்று ஒரு ராகத்ஹ்டின் பெயர் இருப்பதால் "தர்மாவதி" என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்று பதில் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு ரகங்களின் பெயர்ப்பட்டியலைப் பார்த்தபோது பக்கத்திலேயே "ஹேமவதி" என்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்.
சிக்கல்தான். குழப்பம் தீரவில்லை
ந்ன்றி சங்கரசுப்ரமணியன்: காலம் கெட்டுப் போச்சு. படித்த பெண்கள் கள் ஊற்றிக் கலந்து கொடுக்கிறார்கள். மாரியப்பன் பெண் மேல் கண் வைக்க வேண்டாம் மாமியார் பார்த்து மிரள வைத்திடுவார்கள்.