இன்று காலை வெளியான வெடி:
தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4)
அதற்கான விடை: போதியது = போது + திய
போது = மொட்டு
திய = வேதியர் -- வேர்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்! 💐
வேதியரில் (மறையயோர்) வேரை தோண்டியெடுத்து (கெல்லிய), மலர் அரும்பி விரிந்து கொண்டே இருக்கும் போது ( மொட்டு ) , போதியது (தேவையான அளவு) கிடைத்ததே, என மகிழ்வுற்றேன்!
***************************
தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4)
மறையோர்
= வேதியர் (அந்தணர்)
மொட்டு = போது
வேரைக் கெல்லிய
= வேதியர் - வேர்
= திய
வைத்த மொட்டு
= திய inside போது
= போதியது
= தேவையான அளவு
**************************
பூ என்பது பொதுப் பெயர்! அதன் பல நிலைகள்:
அரும்பும் போது - அரும்பு
அரும்பிப் பனியில் நனையும் போது - நனை
நனைந்து முத்தாகும் போது - முகை
வெடிக்கத் தயாராக இருக்கும் போது - மொக்குள்
அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது - போது
மணம் வீசத் தொடங்கும் போது - முகிழ்
மலர்ந்த பின் - மலர்
இன்னும் நன்றாக மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது - அலர்
கூட்டமாக மலர்ந்தால் - பொதும்பர்
வீழும் போது - வீ
உதிர்ந்து கிடக்கும் பூக்கள் - பொம்மல்
பழுப்பாய் வாடிய பின் - செம்மலர்
***************************