உதிரிவெடிகள் 3931--3948
வாஞ்சிநாதன்
*********************
இதோ வந்துவிட்டது 2020 ஆண்டுக்கான பொங்கல் தயாரிப்பு.
இப்போது உதிரிகளாக அளிக்கிறேன்.
பின்னர் பகல் 10 மணிக்கு வலைக்கட்டத்துடன் வெளியிடுவேன்.
குறுக்காக
3931. ஒளியிழந்த வட்ட நிலவை முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3)
3932. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3)
3933. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2)
3934. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3)
3935. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5)
3936. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5)
3937. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3)
3938. பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2)
3939. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5)
3940. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3)
நெடுக்காக
3941. 3933இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6)
3942. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர் மகள் (3)
3943. பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை அப்பாவுடன் பிறந்தவள் நீங்கிக் கலைத்தாள் (5)
3944. வைரமணிந்த கையின் முனைகளில் பாய்ந்தோடுமொன்று (2)
3945. தில்லையாடியின் கொடித்தாய் (6)
3946. படித்த பெண் காய்ந்து போகக் கலந்து மதுவில் ஊற்றினாள் (5)
3947. குற்றமற்ற வழி பிறந்த பின் பிறந்தது கடைசி நிலா (3)
3948. முத்துமிழ் அருவி நீரில் தெறிப்பது (2)
Comments
Yes!
I have just posted my answers
Here is the link
https://udhirivedi.blogspot.com/2020/01/2020.html?m=1