Skip to main content

விடை 3960


இன்று காலை வெளியான வெடி:
ஒப்பற்ற மதியால் யானையை அடக்கலாம் (4) 
அதற்கான விடை:
  நிகரிலா = நிலா + கரி

மதி = நிலா
யானை =  கரி
ஒப்பற்ற = நிகரிலா

இன்றைய வெடிக்கு வழக்கத்திற்கு அதிகமாக கருத்துரைகள் காலையிலே வந்திருப்பதைப் பார்த்தேன். இது விசேஷமான சிக்கல்களேதும் இல்லாமல் அமைக்கப்பட்டதுதான்.  வழக்கமான வழிமுறைகள் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேலெழுந்தவாரியாகப் படிக்கையில் தோன்றும் பொருளால் இதற்கு அதிக வரவேற்பு. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய பின்னர் சிலர் இன்றைய புதிரைப் படித்து யானையை அடக்க நினைத்தால் விபரீதம் நிகழலாம்.  அதற்கு நான் பொறுப்பல்ல.

மதியால் அடங்கும் மதயானை என்று
புதிரின் பொருளை மனதில் பதிந்தோர்
அதிராது அமர்ந்தனர் தோற்றபின் சொல்வர்
விதியால் நிகழ்ந்த வினை



இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

Comments