இன்று காலை வெளியான வெடி:
சிவசம்போ கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2)
அதற்கான விடை: போகி (சிவசம்போ கிருஷ்ணா)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
சிவசம்போ கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2)
அதற்கான விடை: போகி (சிவசம்போ கிருஷ்ணா)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
Comments
புதிர் அருமை மட்டுமல்ல எளிமையும்கூட!
*********************
சிவசம்போ கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2)
சிவசம்போ கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து
= சிவசம் போகி ருஷ்ணா
= போகி
சுகங்களில் திளைப்பவன்
= போகி
*********************
ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகி; இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி
*****
உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.
நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:
“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான் ”
(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி நான்கு வேளை உண்பான் போகியே உடல் விட்டு போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).
*********************