Skip to main content

பொங்கல் வெடி 2020

பொங்கலுக்கு விடுமுறை என்பதால் இன்று படிக்க செய்தித்தாள்கள் வராது. எனவே மிச்சமாகும் நேரத்தை இப்போது இந்த வலைக்கட்டப் புதிரில் மூழ்கிச் செலவழியுங்கள்.

இதற்கான விடை  19/01/2020 ஞாயிறன்று இரவு 8 (எட்டு)   மணிக்கு வெளிவரும்.

வழக்கம்போல் நண்பர் ஹரி பாலகிருஷ்ணன் உருவாக்கிய செயலி விடைகளை நிரப்பி அனுப்ப உதவும்.





குறுக்காக
3. ஒளியிழந்த  வட்ட நிலவை  முடிவாகச் சேர்ப்பதுதான் முறை (3)
5. வந்தாய், மாமன்னா! அடக்கினாய், காது குத்த தேவையானவனை (2,3)
6. உள்ளே தள்ளப்பட்டவன் கையேந்தி உள்ளேயில்லை(2)
7. உயிருள்ளவரை விடமாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாதது (3)
8. மாதர் தடுமாற வசந்தி இடையொடியப் பாடிய ராகம்? (5)
11. எடை தொடர்பில்லாத காரியத்தை முடி (5)
12. மதி நிறைந்த மார்கழி நன்னாளில் சமைப்பது தின்று கடைசியாக வந்த வேழம் (3)
14. பலாச்சுளையிலும் கோதுமையிலும் காணப்படுவது (2)
16. காலில்லாமல் இந்திரலோகத்தில் ஆடுபவள் முன்னே வந்த பெண் ஒரு மீன் (5)
17. மாமியாரவள் விட்டுவிட்டு வர பயப்படு (3)

நெடுக்காக

1.  6இல் இருப்பவன் மேலே வரமுடியாதபடி இங்கே இருக்கலாம் (6)
2. எனக்கு மாரியப்பனிடம் பிடித்தது அவர் மகள் (3)
3. பிறர் தூண்டலின்றி அன்னார் தவத்தை  அப்பாவுடன் பிறந்தவள் நீங்கிக் கலைத்தாள் (5)
4. வைரமணிந்த  கையின் முனைகளில் பாய்ந்தோடுமொன்று (2)
9. தில்லையாடியின் கொடித்தாய் (6)
10. படித்த பெண் காய்ந்து  போகக் கலந்து மதுவில் ஊற்றினாள்  (5)
13. குற்றமற்ற வழி பிறந்த பின் பிறந்தது கடைசி நிலா  (3)
15. முத்துமிழ் அருவி நீரில் தெறிப்பது (2)

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்