Skip to main content

விடை 3930

இன்று காலை வெளியான வெடி
விளைச்சல் நடுவில் கொட்டிய அன்று பாயசத்தோடு வருவது (4)
அதற்கான விடை:  அறுவடை = அறு + வடை

அறு = அன்று - ன் (நடுவில் கொட்டிய)
வடை = பாயசத்துடன் வருவது
------

நாளை காலை உதிரியாக வெடி வராது. வலைக்கட்டமாக வரும்.
இரண்டு வருடங்களில் புதிர்ப்பக்கத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை கொஞ்சம்தான்  அதிகரித்திருக்கிறது.   உங்கள் நண்பர்களுக்கு இதைத் தெரிவித்து வரச்சொல்லுங்கள். அவர்களுக்கு இப்புதிர்கள் பிடிபடவில்லையென்றாலும்  வேறு ஆர்வமுள்ள நண்பர்களுக்குச் சொல்லி
வரவழைப்பார்கள்.  அதோடு அவ்வப்போது  புதிரைப் பற்றிக் கருத்துரைகளையும் இங்கே கணிசமாக வெளியிடுங்கள். புதிதாக வருபவர்கள் கருத்துரை ஏதுமில்லையென்றால் தவறாக இங்கே ஏதுமில்லையென்று எண்ணி நகர்ந்து போய்விடலாம்.

இன்றைய வெடிக்கு  அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

 

Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்