இன்று காலை வெளியான வெடி:
தினமும் பிடிவாதம் பிடித்த சான்றாக இறக்க வேண்டாம் (5)
அதற்கான விடை: அன்றாடம் = தினமும் = அடம் + ன்றா
அடம் = பிடிவாதம்
ன்றா = சான்றாக - சாக (இறக்க)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
**************************
அன்றாடம் வீசும் உதிரிவெடிகளுடன்
மன்றாடும் புதிராடும்கள வீரர்களை
திண்டாட வைக்கும் பைந்தமிழ் புதிர்களை
செண்டாடும் வாஞ்சியாரின் திறன் அருமை!
அருமை!! அருமை!! 💐
**************************
தினமும் பிடிவாதம் பிடித்த சான்றாக இறக்க வேண்டாம் (5)
பிடிவாதம் = அடம்
இறக்க = சாக
சான்றாக வில் சாக வேண்டாம்
= சான்றாக- சாக
= ன்றா
பிடிவாதம் பிடித்த சான்றாக
= அடம் பிடித்த ன்றா
= அன்றாடம்
= தினமும்
***************************
ஏதோ ஒரு காரணத்துக்காகப்
பிடிவாதம் பிடிக்கும்போது
வெளிப்படுகிறது..
எல்லாரிலும் ஒளிந்திருக்கும்
ஒரு குழந்தை..
டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 2012 குமுதத்தில் வெளியானது.
*****************************