Skip to main content

உதிரிவெடி 3957

உதிரிவெடி 3957  (ஜனவரி 25, 2020)
வாஞ்சிநாதன்
*********************

 தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில்  உலா என்று ஒரு வகை.  திருவிழாவில்  வீதியில் உலாவரும் உற்சவரின் அலங்காரத் தோற்றத்தை விவரித்துப் பாடுவது.   உ வே சா தன்னுடைய சுயசரிதையில் ஒரு விஷயம் குறிப்பிடுகிறார்.  திருவிடை மருதூரில்  நடந்த உலாவில்  பெண்கள்
 உற்சவர் அழகில் மயங்கினார்களாம். அப்புலவருக்கு வேண்டாத  ஒருவர் அவ்வூர் பெரிய மனிதரிடம்  சென்று  உங்கள் ஊர் பெண்களையெல்லாம்  "அவன் அழகில் மயங்கினேன்" என்று இழிவாக எழுதிவிட்டார் என்று கோள் மூட்டிவிட்டார்.

ஒரு நாள் இப்படி உலாவரும் இளமை ஊஞ்சாலாடுவதைப் பார்த்து எழுதப்பட்ட புதிர் இன்று:

கரும்புடன் நீ தோற்றமளிக்கிறாய் மன்மதா!  சிட்டு வாலொடியப் படபடப்பாள் (4) 



Comments

CHITTANANDAM said…
VERY GOOD CONSTRUCTION. PARATTUGAL.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்