இன்று காலை வெளியான வெடி:
மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4)
அதற்கான விடை: தீர்மானி = தீனி + ர்மா
ர்மா = மார் "தட்டி"
தீனி = மாடு சாப்பிடுவது.
தீவனம்தான் மாடு சாப்பிடும் உணவுக்குப் பொருத்தமான சொல், தீனி மனிதர்கள் சாப்பிடுவது என்று டாக்டர் ராமகிருஷ்ணா ஈஸ்வரன் கேட்டுள்ளார்.
தீனி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கூறப்படுவது. (மன்னரே நீங்கள் பாட்டுக்கு எனக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து விட்டீர்கள், அதற்கு நான் எப்படித் தீனி வாங்கிப் போடுவேன்?)
நான் மாடு சாப்பிடுவது என்று போட்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.
"வெளியே மாடு சாப்பிடுவது பற்றி" என்பதை "ஓட்டலுக்குச் சென்று மாட்டுக் கறி சாப்பிடுவது" என்றும் சிலரைத் தடுமாறி யோசிக்க வைக்கலாமே!
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
அது சரி இன்றைய புதிர்ச் சொற்களைக் கொண்டு ஒரு கற்பனை. உடல் பருத்திடக் கூடாதென்று கனியிருப்பத் தோல் கவர்ந்தாரைப் பற்றி ஒரு வெண்பா:
மார்தட்டிச் சொல்வரோ மாடுபோல் தம்பசியென்(று)
ஊர்வாய்ப் பழியஞ்சி உண்பார் ஒரேகவளம்
நார்ச்சத்தே நன்றாம் கனியெறிந்து தோலுண்ணத்
தீர்மானம் செய்தார் தெரிந்து.
Comments
தீவனம்= கால்நடைகள் உணவு என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.
தீனி = உணவு according to the same source. So theevanam is cattle feed while all the rest are theeni, be it you, your pet elephant or tiger!😊. I rest my case.
Appreciate the vile stratagem of "deliberate misdirection" about beef. But be careful of the lynching brigade!!!.
Incidentally, I do not know the Tamil word for lynching. There was never a need for it as it is not a practice in Thamizhagam, I suppose.
Sorry about slipping into English, just for speed of typing