புது வருஷம் பிறந்தவுடன் தினசரி கிழிக்கும் ராணி முத்து காலண்டர் வாங்குவது பல வருஷங்களாகப் பழக்கம். வருஷம் தவறாமல் ராணி முத்து காலண்டரில் அதே முருகன் புன்முறுகிக் கொண்டிருப்பார்.
அழகென்றால் முருகனே என்ற பக்திப்பாடல் வேறு இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன். இரண்டையும் பயன்படுத்தி தயார் செய்துதான் இன்றைய புதிர்.
முருகன் கதற காலை மறைத்தது வாமனனாக இருக்கலாம் (7)
இதற்கான விடை: அழகுள்ளவன்.
இதைத் தவிர இன்னொரு விடையும் ஓரளவு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிடவேண்டும்.
கேசவன்தான் நான் நினைத்ததிலிருந்து மாறுபட்டு அழகுடையவன் என்று விடையனுப்பியுள்ளார். ஆவணி மாதத்தில் பருவமழை போது ஓணம் கொண்டாடப்படும் நாட்டில் வாமனன் மரக்குடையுடனே காட்சி தருகிறார்.
(மரக்குடை கேரளாவில் மிகவும் பிரபலம் போலும். மரக்குடையென்று தொடங்கும் ஓர் இனிமையான பாட்டு இதோ. ) இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வாமனன் குடையுடன் சித்தரிக்கப்படுகிறாரா?
ஆனால் நான் மனதில் அமைத்த விடைக்கு முழு விளக்கத்தையறிய ராம்கி கிருஷ்ணனின் விடையிலுள்ள விவரங்களைப் பார்க்கவும். ஹிந்து ஆங்கில நாளேட்டிற்குப் புதிரமைக்கும் ஆசிரியர்களில் ஒருவரான அவர் தமிழ்ப் புதிர்களில் ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments
கதற=அழ, கத்த, அலற
கால்=வ,பாதம்
வாமனன்=அவதாரம்,குள்ளன்
இப்படி எல்லாம் போட்டு கலக்கி போட்டு கலக்கி பாத்தேன், பிடிபடலை:(
வாமனனாக இருக்கலாம் தான் பொருள் னு ஏமாந்துட்டேன்