Skip to main content

விடை 3926

புது வருஷம் பிறந்தவுடன் தினசரி கிழிக்கும் ராணி முத்து காலண்டர் வாங்குவது பல வருஷங்களாகப் பழக்கம்.  வருஷம் தவறாமல் ராணி முத்து காலண்டரில்  அதே முருகன் புன்முறுகிக் கொண்டிருப்பார்.

அழகென்றால் முருகனே என்ற பக்திப்பாடல் வேறு இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன். இரண்டையும் பயன்படுத்தி தயார் செய்துதான் இன்றைய புதிர்.

முருகன் கதற காலை மறைத்தது வாமனனாக இருக்கலாம் (7)

இதற்கான விடை:  அழகுள்ளவன்.

இதைத் தவிர இன்னொரு விடையும் ஓரளவு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிடவேண்டும். 
கேசவன்தான்  நான் நினைத்ததிலிருந்து மாறுபட்டு  அழகுடையவன்  என்று விடையனுப்பியுள்ளார். ஆவணி மாதத்தில் பருவமழை போது   ஓணம் கொண்டாடப்படும்  நாட்டில்  வாமனன்   மரக்குடையுடனே    காட்சி தருகிறார்.
(மரக்குடை கேரளாவில் மிகவும் பிரபலம் போலும். மரக்குடையென்று தொடங்கும் ஓர் இனிமையான பாட்டு இதோ. ) இந்தியாவின் மற்ற பகுதிகளிலும்   வாமனன் குடையுடன் சித்தரிக்கப்படுகிறாரா?

ஆனால் நான் மனதில் அமைத்த விடைக்கு முழு விளக்கத்தையறிய ராம்கி கிருஷ்ணனின் விடையிலுள்ள விவரங்களைப் பார்க்கவும். ஹிந்து ஆங்கில நாளேட்டிற்குப் புதிரமைக்கும் ஆசிரியர்களில் ஒருவரான  அவர் தமிழ்ப் புதிர்களில் ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

விடைகளின் பட்டியலைக்  காண இங்கே செல்லவும்.

Comments

Ambika said…
முருகன்=அழகன், கந்தன், கம்பன், குமரன்
கதற=அழ, கத்த, அலற
கால்=வ,பாதம்
வாமனன்=அவதாரம்,குள்ளன்
இப்படி எல்லாம் போட்டு கலக்கி போட்டு கலக்கி பாத்தேன், பிடிபடலை:(
வாமனனாக இருக்கலாம் தான் பொருள் னு ஏமாந்துட்டேன்
Kesavan said…
All dasavatharam images I have seen show Vaman with an umbrella. I did not think much of the shortness since he is a little boy anyway!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்