உதிரிவெடி 3930 (ஜனவரி 15, 2020)
வாஞ்சிநாதன்
**********************
வாஞ்சிநாதன்
**********************
நேற்று சுகத்தில் திளைத்து போகி கொண்டாடியதால் இன்று புதிரில் பொங்கல் படைக்கப்படும் என்று
எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கப்போகிறேன். பொங்கல் கிடையாது, பாயசம்தான்.
அதோடு இன்னொரு தகவல். இன்று நான் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் தின்றுவிட்டு மத்தியானம் சும்மா இருக்கும் நேரத்தில்
ஒரு வலைக்கட்டப் புதிர் அமைக்கவிருக்கிறேன். அது நாளை மாட்டுப் பொங்கலன்று வெளிவரும்.
அதனால் நாளை காலை ஐந்து மணிக்கே எழுந்து உங்கள் மாட்டைக் குளிப்பாட்டி நெட்டிமாலை அணிவித்து மற்ற அலங்காரம் செய்வித்து பொங்கல் படைத்து ஆறு மணிக்குப் புதிர்ப்பக்கம் வரத் தயாராகி விடுங்கள். நாளைக்கு செய்தித்தாளும் வராது என்பதால் இது பொருத்தமாக இருக்கும். நேற்று போல் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இன்றைய எளிய புதிரை விரைவில் அவிழ்த்துப் பொங்கலைக் கொண்டாட எனது வாழ்த்துகள்.
புதிரவிழ்த் திந்நாளில் பொங்கலிட் டுண்பார்
மதியுடை மாந்தர் மகிழ்ந்து.
விளைச்சல் நடுவில் கொட்டிய அன்று பாயசத்தோடு வருவது (4)
Comments
இனிய பொங்கல் வாழ்த்துகள்!