இன்று காலை வெளியான வெடி:
பயந்தவனுக்கு முன் பாதி பாதுகாப்பு (3)
அதற்கான விடை: அரண் = அரண்(டவன்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்
நேற்று இலுப்பைப் பூவின் இனிப்போடு புளிப்பும் சுவை என்று சொல்லியிருந்தேன். அதானல் புளிப்பான ரசத்தின் பெருமையைக் கூற பெரும்பாலும் (15இல் 12) "புளிமா" சீர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட வெண்பா இதோ:
அளிய வடித்த அமுதில் ரசத்தைத்
தெளியக் கலந்து புசித்தால் தெரியும்
துளித்தேனில் தோய்ந்த பலாவும் தொடாது
புளியில் பொதிந்த சுவை
Comments