Skip to main content

விடை 3961


இன்று காலை வெளியான வெடி:

வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4)
அதற்கான விடை:  செழிப்பு = செப்பு + ழி

செப்பு = சொல்  (லு)
ழி = கொழிக்கும் - குருகும்
குருகு = கொக்கு

கபிலரின் குறுந்தொகைப் பாடல்:
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

ஏ கே ராமனுஜன் மொழிபெயர்ப்பு: (The Interior Landscape)
Only the thief was there,no one else
and if he should lie, what can I do?
There was only
a thin legged heron standing
on legs as millet stems
and looking
for lampreys
in the running water
when he took me.

திருவெம்பாவையில் குறிப்பிடப்படும் குருகு இந்த திரைப்படப்பாடலில் தொடக்கத்தில் இடம் பெறுகிறது.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
குருகு

பொருள்
பெயர்ச்சொல்.

வெண்நிற கொக்கு வகை ஆகும்.
***********************
வளம் கொழிக்கும்  குருகும் பறந்த பின் நுழையச் சொல் (4)

குருகு = கொக்கு
குருகும் = கொக்கும்
பறந்த பின்
= கொழிக்கும்− கொக்கும்
= *ழி*

சொல்= செப்பு

நுழைய = ழி inside செப்பு

வளம் = *செழிப்பு*
***********************
Raghavan MK said…
குறுந்தொகையில் குருகு!

குறுந்தொகையின் 25 ஆவது பாடல்.

பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று! இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
இது கபிலரின் பாடல்.


கருத்துரை:

தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது.
வில்லி பாரதம்


புலர்ந்தன கங்குற் போதும்
பொழிதரு பனியும் சேர

மலர்ந்தன மனமும் கண்ணும்
வயங்கின திசையும் பாரும்

அலர்ந்தன தடமும் காவும்
ஆர்த்தன புள்ளும் மாவும்!!

கலந்தன குருகும் பேடும்
கலித்தன முரசும் சங்கும்!

🙏🙏
Vanchinathan said…
வில்லி பாரதத்தில் இப்பாடல் அழகான ஓசைநயத்துடன் இருக்கிறது. நன்றி

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்