இன்று காலை வெளியான வெடி:
ஒளியில்லாக் கோள வடிவம் உடை களைந்து நுழைந்த இடம் முழுதுமில்லை (4)
அதற்கான விடை: இருண்ட = ருண் + இட
ருண் = உடை களைந்த உருண்டை (கோள வடிவம்)
இட = இடம் முழுதுமில்லை
சும்மாவாது புதிரில் உள்ள சொற்களைக் கொத்து ஒரு வெட்டி வெண்பா:
உருண்டையாய் வானில் உலவுகதிர்க்(கு) எட்டா
இருண்ட இடத்தில் ஒளித்தாலும் நீவிர்
திரண்டு விடைகண்டு தேர்ச்சி அடைந்தீர்
புரண்டுநான் செய்த புதிர்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்
Comments
இருண்ட மனத்தினில் ஏற்றும் விளக்கின்
கருணை ஒளியே கடவுள் - அருள்தரும்
ஆண்டவன் பாதமதை அண்டினோர் இப்பிறப்பைத்
தாண்டுவார் இன்னல் தகர்த்து.
Nothing more!!