Skip to main content

விடை 3953


இன்று காலை வெளியான வெடி:
ஒளியில்லாக் கோள வடிவம் உடை களைந்து நுழைந்த இடம் முழுதுமில்லை (4) 

அதற்கான விடை:  இருண்ட =  ருண் + இட

ருண் = உடை களைந்த  உருண்டை (கோள வடிவம்)
இட = இடம் முழுதுமில்லை


சும்மாவாது புதிரில் உள்ள சொற்களைக் கொத்து ஒரு வெட்டி வெண்பா:

உருண்டையாய் வானில் உலவுகதிர்க்(கு) எட்டா
இருண்ட  இடத்தில் ஒளித்தாலும்  நீவிர்
திரண்டு  விடைகண்டு   தேர்ச்சி அடைந்தீர்
புரண்டுநான் செய்த புதிர்.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்



 

Comments

இன்னொரு வெண்பா!

இருண்ட மனத்தினில் ஏற்றும் விளக்கின்
கருணை ஒளியே கடவுள் - அருள்தரும்
ஆண்டவன் பாதமதை அண்டினோர் இப்பிறப்பைத்
தாண்டுவார் இன்னல் தகர்த்து.
Vanchinathan said…
ஏதோ விளையாட்டான புதிருக்கு இப்படி ஆண்டவன் பாதம், கருணை ஒளி, பிறப்பைத் தாண்டலாம் என்று எங்கேயோ போய்விட்டீர்களே!
By chance, I was discussing பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - குறள் with my friend when the answer was posted. I just tried to fit that using today's விடை!!
Nothing more!!