Skip to main content

விடை 3929

இன்று காலை வெளியான வெடி:
சிவசம்போ  கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2)
அதற்கான விடை: போகி  (சிவசம்போ கிருஷ்ணா)

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

Comments

Raghavan MK said…
போகி பண்டிகைக்காக படைத்த
புதிர் அருமை மட்டுமல்ல எளிமையும்கூட!
*********************
சிவசம்போ  கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து சுகங்களில் திளைப்பவன் (2)

சிவசம்போ  கிருஷ்ணா என்ற கோஷத்தில் மறைந்து
= சிவசம் போகி ருஷ்ணா
= போகி
சுகங்களில் திளைப்பவன்
= போகி
*********************
ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகி; இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி 
*****
உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்கு வேளை உண்பான் போகியே உடல் விட்டு போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).
*********************
Vanchinathan said…
நல்ல வேளை நான் போகியோ, ரோகியே கிடையாது. பகல் 11 மணிக்கு ஒரு தடவையும் மாலை 6 மணிக்கு ஒரு தடவையும் நொறுக்குத் தீனி சாப்பிட்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உண்பதால் இச்சாபத்திலிருந்து பிழைத்துவிட்டேன்!
Joseph said…
அருமையான நகைச்சுவை உணர்வு தங்களுக்கு!!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.