Skip to main content

விடை 3951


இன்று காலை வெளியான வெடி:

தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4)

அதற்கான விடை: போதியது  = போது + திய


போது = மொட்டு
திய = வேதியர் -- வேர்

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
அருமையான புதிர்!
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்! 💐

வேதியரில் (மறையயோர்) வேரை தோண்டியெடுத்து (கெல்லிய), மலர் அரும்பி விரிந்து கொண்டே இருக்கும் போது ( மொட்டு ) , போதியது (தேவையான அளவு) கிடைத்ததே, என மகிழ்வுற்றேன்!

***************************
தேவையான அளவு வேரைக் கெல்லிய மறையோர் வைத்த மொட்டு (4)

மறையோர்
= வேதியர் (அந்தணர்)

மொட்டு = போது

வேரைக் கெல்லிய
= வேதியர் - வேர்
= திய

வைத்த மொட்டு
= திய inside போது
= போதியது
= தேவையான அளவு
**************************
பூ என்பது பொதுப் பெயர்! அதன் பல நிலைகள்:

அரும்பும் போது - அரும்பு

அரும்பிப் பனியில் நனையும் போது - நனை

நனைந்து முத்தாகும் போது - முகை

வெடிக்கத் தயாராக இருக்கும் போது - மொக்குள்

அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது - போது

மணம் வீசத் தொடங்கும் போது - முகிழ்

மலர்ந்த பின் - மலர்

இன்னும் நன்றாக மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது - அலர்

கூட்டமாக மலர்ந்தால் - பொதும்பர்

வீழும் போது - வீ

உதிர்ந்து கிடக்கும் பூக்கள் - பொம்மல்

பழுப்பாய் வாடிய பின் - செம்மலர்
***************************
Vanchinathan said…
@ எம்கே ராகவன்: பூக்கள் தொடர்பாக இத்தனை சொற்கள் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிட்டதற்கு நன்றி. Miranda: What you have said/listed today may be used against you to puzzle you in this blog on some other day.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.