இன்று காலை வெளியான வெடி:
இணையற்ற அமாவாசை வந்ததால் வெளிப்பட்ட ஒரு மிருகம் ! (2)
இதற்கான விடை: கரி (யானை)
(இணையற்ற = ) நிகரிலா என்பதில் நிலா போய்விட்டால் அமாவாசைதானே!
குகையிலே ஒளிந்து வாழ்ந்துகொண்டு அமாவாசைக்கு மட்டும் வெளியே வரும் மிருகம் பற்றி புதிர் அமைக்க ஆசைதான், ஆனால் நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியை நான் பார்ப்பதில்லையென்பதால், அது பற்றிய விஷய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அமாவாசை இருட்டில் அட்டைக் கரியாகத் தோன்றும் யானைதான்.
இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகள் இங்கே.

அமாவாசையில் ஆனை
வரியோடு காட்டில் வளையவரும் வேங்கை
அரிதாகத் தென்படுமாம் ஆங்கு நரியும்
திரிவதற்கு அஞ்சும் திசையறியா நேரம்
கரிவரும் கானகத்தில் காண்
இதற்கு அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது. சும்மா பொழுது போக்குக்காக கரி, நரி, வரி என்று எதுகையாக சொற்களை யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு நேரிசை வெண்பாவைக் கோத்துவிடலாம் என்று தோன்றியது. அவ்வளவுதான்.
Comments
வெண்பாவே எளிதாகப் புரிகிறது!
பாராட்டுகள்!!