தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
_காற்றில் எதிர்ப்புறம் சாய அவர் யயாதி இல்லை (4)_
_காற்று_ = *வளி*
_எதிர்ப்புறம் சாய_
= *சாய --> யசா*
_காற்றில் எதிர்ப்புறம் சாய_
= _*வளி* யில் *யசா*_
= *வ+யசா+ளி*
= *வயசாளி*
= _அவர் யயாதி இல்லை_
(இளைஞன் இல்லை! )🤔
*************************
யயாதியின் இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் வாழ்ந்தான்.
*************************
ஒரு நாலு வருஷம் முன்னாள் ஒரு இந்திய தூதரக அதிகாரி தேவயானி என்னவோ_ஒரு_கர் பணிப்பெண் கொடுத்த புகாரினால் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பாடாள்.
இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்ன வென்றால், தேவயானி என்ற பெயருள்ள மாதர்கள் தங்கள் பணிப்பெண்களை வெளிநாட்டுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும்.