Skip to main content

விடை 3669

இன்று காலை வெளியான வெடி:
உயர்வான கல்  ஆனால் மத்யம ரகம்,  இறுதியில் சிறந்த கலவையானாலும்! (5)  

இதற்கான விடை: மரகதம் = ம (த்யமம்)  + ரகம் + (சிறந்) த
நேற்றைய  ஆங்கிலப் புதிரோடு இதையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். கடைசி நேரத்தில் வேண்டாமென்று ஒரு நாள் தாமதித்து விட்டேன்.

அந்த ஆங்கிலப் புதிர் பற்றி  அறிய இங்கே செல்லவும்.


இன்றைய புதிருக்கும் 55க்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்துள்ளன.
இங்கே சென்று பார்க்கவும்.

Comments

Raghavan MK said…

********************
_உயர்வான கல்  ஆனால் மத்யம ரகம்,  இறுதியில் சிறந்த கலவையானாலும்! (5)_
 
_மத்யம_ = *ம*

_இறுதியில் சிறந்த_
= *த*

_ம , த , ரகம்_
_கலவையானாலும்_
= *ம+த+ரகம்*
= *மரகதம்*
= _உயர்வான கல்_
********************
நேற்று Krypton ஆங்கிலப் புதிரில் ஒளிர்ந்த Emerald ஐ காணவில்லை என்று வந்த புகாரையடுத்து சோதனையில் இன்று தமிழ் உதிரிவெடியில் அது மரகதமாக அவதாரமெடுத்து ஒளிந்துள்ளது என்று கண்டுபிடிக்கப் பட்டது! துப்பு துலக்க உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி !😌
**************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்