Skip to main content

விடை 3664

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி:
கடவுளிடத்தில் அரசன் நீங்கிப் பெற்ற ஆயுதம் (2)
இதற்கான விடை:  வில் = கோவில் - கோ

இன்று பெறப்பட்ட  அனைத்து விடைகளுமடங்கிய பட்டியல்

கோவிலுக்குச் சென்றும் குறுக்கெழுத்தைச் செய்வதைப்
பாவிநான் எண்ணினேன்  பல்விதமாய் --  நாவினிக்கும் 
சொற்களைத் துண்டாக்கிச் சுற்றி வெடியமைத்தேன் 
கற்பனையில் கண்டேன் சுகம்.




Comments

Raghavan MK said…
சொல்லும் மணி ஓசை_
*************************
*_நாயகர்களும் வில்களும்_*

வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.
சிவனின் வில் - பிநாகம் கண்ணனின் வில் - சாரங்கம் இராமனின் வில் - கோதண்டம் அருச்சுனனின் வில் - காண்டீபம்
கர்ணனின் வில் - காண்ட பிரஸ்தம்
மன்மதனின் வில் - கரும்பு
***
_கடவுளிடத்தில்  அரசன் நீங்கிப் பெற்ற ஆயுதம் (2)_

_கடவுள் இடத்தில்_
= *கோவில்*
_அரசன்_ = *கோ*

_கடவுளிடத்தில்  அரசன் நீங்கிப் பெற்ற_
= *கோவில் - கோ*
= *வில்*
= _ஆயுதம்_
🏹🏹🏹🏹🏹🏹🏹
Muthu said…
புதிராசிரியர் மீண்டும் வெற்றிகரமாகத் திசை திருப்பிவிட்டார்! கடவுளிடத்தில் என்றால் ஆண்டவனிடத்தில், இறைவனிடத்தில் என்று தொடங்கி, கைலாயம், கயிலாயம், வகுண்டம், பாற்கடல் எல்லாம் தொட்டு, கடவுளிடத்தில் இருப்பது "உளி"யோ என்றுகொஞ்சம் ஸ்தம்பித்துத் திடீரென்று கோவில் பளிச்சிட்டது! பலர் உளி என்று விடை சொல்வர் என்று யூகித்து ஏமாந்தேன். புதிரும், வெண்பாவும் மிக இரசிக்கும்படி அமைந்தன. வாழ்துகள்!
Vanchinathan said…
வைகுண்டம்தான் சென்ற வாரம் சரவெடியில் போய்வந்தாச்சே. கடவுள்கள் யாரும் உளி போல் நல்லதாகப் படைக்கும் திறனுக்கேற்ற பொருள் வைத்துக் கொள்வதில்லையே. சூலாயுதம், திரிசூலம், சக்கரம் இதைத்தானே கையில் வைத்திருப்பார்கள்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.