Skip to main content

விடை 3676

இன்றைய வெடி:
எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பார்க்க எல்லோராலும் முடியும் (4)

இதன் விடை: நோக்கம்
 இன்று அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்.


Comments

மிகவும் இயல்பான சொற்றொடர், இது புதிர் என்று சொன்னால்தான் தெரியும்!
Muthu said…
உடனே தோன்றுவது "காரணம்" என்ற சொல்லே! ஆனால் "எதற்காகச் செய்கிறோம்" என்பதற்கு "What is the objective or goal of the act" என்று யோசித்ததும் புதிரின் மறு பாதிக் குறிப்புக்குப் பொருந்த விடை கிடைத்தது! பலரும் காரணம் என்ற விடை அளித்திருப்பது "காண" = "பார்க்க" என்று திசை மாறி சென்றதால் தான். (என் தமிழ்
-ஆங்கில மூலம்- தட்டச்சு மென்பொருளில் ச் தட்டச்சு செய்ய நேரடி வழி இல்லை!) சுற்றி வளைத்து சமாளிக்க வேண்டியிருக்கிறது! மொத்தம் பங்கேற்றோர்: 47; சரியான விடைகள்: 32
பல புதிர் அமைப்பு உத்திகள் (ஒவ்வொரு நாளும் புதியதாக) தெரிந்து கொள்கிறேன்! நன்றி கலந்த பாராட்டுகள்!
Vanchinathan said…
காரணம் என்பது நடக்கப் போகிற செயலுக்கு பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் கடந்த கால நிகழ்ச்சிக்கு ஏன் நடந்தது என்ற கேள்வியிக்கு விடையாக அமைவது. நோக்கம் என்பதில் இந்த விளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. காரணத்தில் அது அவசியமில்லை. பூமியிலே மாம்பழம் விழ வேண்டுமென்பதற்காக ஈர்ப்புவிசை இல்லை. ஈர்ப்புவிசை காரணத்தல் மாம்பழம் மரத்திலிருந்து விழுகிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்