கோடைச் சரவெடி (மே 2019)
வாஞ்சிநாதன்
***************
இச்சரவெடிக்கு விடைகள் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் அவகாசம். மே 6ஆம் தேதி திங்கள் இரவு 9 மணிக்கு விடைகளும், விடையளித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்படும். விடைகளைப் படிவத்தில் ஒரே பத்தியாக அதன் எண்ணுடன் எழுதவும்.
குறுக்காக
1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5)
4. வாளை வைக்க கரிகாலனுக்கு தலைநகரில் பாதி தேவைப்படும் (2)
6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4)
7. பெண் மரம் வெட்டி சாவு அவ்விடம் சூழ்ந்தது (4)
9. புரட்டா வைகாசி தொடங்கி மார்கழியில் பாடப்படும் (5)
12. மனைவி முதல் மாதம் இடை சூழ்ந்த மார்கழியில் பெய்வது (4)
14. பெண்பாதி கொண்ட ஆண்மகனே! கடவுளே! (4)
17. ஒட்டு ஒப்பானது (2)
18. ஒரு செயலைத் தேர்ச்சியுடன் ஆனால் குழப்பமாகப் படம் திற (5)
நெடுக்காக
1. இதையடைந்தவர் மேலே செல்வதில்லை (3)
2. செய்வேனென்ற கூற்று குழப்பத்தில் வழக்கு தொடர்ந்தவர் முனை வெட்டி நறுக்கு (5)
3. கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து பிரிவு (2)
4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றபின் உன் அண்ணனை . . . (3)
5. பொருத்தமான யானைப் பல்லாலான குதிரையின் தலையை விழுங்கு (4)
7. பெற்றவர், குற்றமற்றவர், விற்றவர், தலைவாங்கியவர் (3)
8. பாக்மதிக் கரையில் இருக்கும் திருமணமான காளை! (4)
10. ராஜகுரு மானிடர்களிடம் கண்ட ஒரு மாவினம் (3)
11. சிவலோகப் பதவியை விரும்பாத பக்தர்கள் செல்ல விழையுமிடம் (5)
13. இலக்கியத்தின் பிரிவு பாதி பெண்ணைச் சுற்றிடும் வீட்டின் பகுதி (3)
15. வறுத்தெடுக்க மாட்டை விரட்டி ஆட்டவா சுழற்றவா? (3)
16. சுரத்தையிழந்த ஒரு வெடி வகையில் தோன்று (2)
Comments
பிழைகள் களையப்பட்டுள்ளன.
http://sparthasarathy.biz/vanchi_may2019.html
பல புதிர்கள் தனித்து விடை காண கடினம். குறுக்கும் நெடுக்கும் குறுக்குவழியில் விடை காண உதவி செய்தது.
தங்களின் அருமையான இப்புதிருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...
நான் உதிரியாகத்தன் புதிர்கள் அளித்து வருகிறேன். இது போல் முழுக் கட்டவலைகள் ஆடிக்கொருமுறை சூரிய கிரகணத்துக்கொருமுறைதான் செய்ய முடியும். இருந்தாலும் உதிரிவெடியாக வரும் புதிர்களையும் முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அருமை அருமை அருமை மீண்டும் எப்போதோ என்று ஏங்குகிறேன்!
இதை வடிவமைக்க தாங்கள் மேற்கொள்ளும் சிரமும்எனக்கு புரிகிறது
நன்றி.