Skip to main content

விடை 3670

இன்றைய வெடி:
மாறா விரோதத்தையொழித்து  பண்டிகை  கொண்டாட பாயா? (4)
இதற்கு விடையைப் பின்வரும் பாடலிலிருந்து தோண்டி எடுத்திடுவீர் தொட்டு 

தாண்டிப் பலகாதம் தாவிடும் மூளைக்கு
வேண்டும்  புதிரால் விருந்தென்றோர்க்(கு)  ஆண்டிரண்டாய்
தூண்டிடும் சிந்தனை தூய  தமிழ்வெடி
பாண்டியா  ஆராய்ந்து பார்.

ஏனிப்படி வெண்பா என்று கேட்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை.முன்பொருமுறை நான் சொல்லியிருந்த வெண்பா வாட்ஸ ப் குழுவில்  பலரும் பங்கேற்று இட்ட வெண்பாக்களில் அபுல் கலாம்  ஆசாத்  தன்னுடைய பாக்களைத் திரட்டி   மின்னூலாக அளித்துள்ளார்.  அதைக் கேள்விப்பட்ட விளைவுதான். இன்று  வளைகுடா நாட்டில் எப்போது பணி பறிபோய்விடுமோ என்ற  இக்கட்டான நிலையைச் சித்தரிக்க அவர் எழுதியது:

ஓலை  வரவெண்ணி ஒவ்வொருநாள் காத்திருக்கும்
வேலை நிலவரம் வீற்றிருக்கும் -- பாலையினில்
புற்களும் பூதமெனப் புன்னகைப்ப தாய்த்தோன்றும்
நிற்கத் துணிவிருந்தால் நில்.       ---  அபுல் கலாம் ஆசாத்

ஈற்றடி என்றும் இனிப்பு என்ற அந்த  மின்னூல் kindle  நூலாக அமேசானில் கிடைக்கிறது. வாங்கிப் படியுங்கள்.

சரி இன்றைய விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்:









Comments

Raghavan MK said…

**********************
_மாறா விரோதத்தையொழித்து  பண்டிகை  கொண்டாட பாயா? (4)_
_விரோதம்_ = *பகை*
_பண்டிகையில் ஒழித்து_
= *பண்டிகை - பகை*
= *ண்டி*
_பாயா கொண்டாட_
= _பாயா கொண்டு ஆட_
= ( *பாயா + ண்டி* ) _ஆட_
_ஆட is anagram indicator_
= *பாண்டியா*

_மாறன்_
= *பாண்டியன்*
_மாறா_
= *பாண்டியா*
**********************
*மாறன்* என்பது 
பாண்டியர் பெயர்களுள் ஒன்று.
( *மாறன்வழுதி* சங்க கால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். )
**********************
மொதல்ல ரொம்ப யோசிக்காம மாண்டிறா (செத்துபோயிராத)ன்னு ஒரு விடை போட்டேன். அப்புறம் சரி பாத்துக்கலாம் ன்னு கொஞ்சம் தெனாவட்டு தான். காலையில எழுந்திருக்கும்போதுதான் பொறி தட்டியது, மாற! ன்னு மின்ன ஒருதரம் பாண்டியனை அண்மை விளியில வந்திருந்ததே, இப்ப கொஞ்சம் தள்ளி நின்னு கூபிடாறாரு ன்னு!

இதே மாதிரி நேத்திக்கும் படிகம் (கல் = படி, மத்திய ரகம் = க, ம் கடைசி எழுத்து ) ன்னு போட இருந்தேன். நாலு எழுத்து, புதிர்ல திருத்தம் வரும்ன்னு எதிர் பாக்கற அளவு தைரியம். அப்புறம் கொஞ்சம் யோசிச்சு மரகதம் கண்டு பிடிச்சேன்.
Vanchinathan said…
செத்துப்போகாத என்பதற்கு "மாண்டிரா" என்று இடையின ரகரம் தேவை என்பதை கவனித்திருந்தால் முன்பே வேறு விதமாய் யோசித்திருப்பீர்கள், நீங்கள் எப்போதாவது தவறு செய்தாலும் அதை ருசிகரமான விளக்கத்துடன் அளித்துவிடுகிறீர்கள்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்